ETV Bharat / state

75ஆவது சுதந்திர தினம்: பாஜக சார்பில் தேசியக்கொடி ஏந்தியவாறு டிராக்டர் பேரணி! - சுதந்திர தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சி அருகே

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சி அருகே பாஜக சார்பில் தேசியக்கொடி ஏந்தியவாறு டிராக்டர் பேரணி நடைபெற்றது.

சுதந்திர தின கொண்டாட்டம் பாஜக சார்பில் தேசியக் கொடி ஏந்தியவாறு டிராக்டர் பேரணி!

author img

By

Published : Aug 11, 2022, 10:21 PM IST

கோவை: நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குறிப்பாக, நாட்டு மக்களிடையே தேசபக்தியை வளர்க்கும் விதமாக பாஜக சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவில், சுதந்திர தினம் குறித்த விழிப்புணர்வுக்கான டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது.

கிணத்துக்கடவு பேருந்து நிலையம் அருகே தொடங்கிய இப்பேரணியில் தேசியக்கொடிகளை கட்டியவாறு 75 டிராக்டர்கள் பல்வேறு கிராமப்பகுதிகளில் வலம் வந்தன. பாஜக கோவை தெற்கு மாவட்டச்செயலாளர் வசந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற இந்தப்பேரணியை, மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் தொடங்கி வைத்தார்.

இதில் குமரேசன், ஆனந்த், மகேஷ், தர்மபிரகாஷ் உள்ளிட்டப்பலர் கலந்து கொண்டனர். பேரணி குறித்து தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் கூறுகையில், ’நம் நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.
இதுதொடர்பாக மக்களிடையே தேசபக்தியை வளர்க்கும் விதமாக பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சுதந்திர தின கொண்டாட்டம் பாஜக சார்பில் தேசியக் கொடி ஏந்தியவாறு டிராக்டர் பேரணி!

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவில் டிராக்டர் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. தேசியக்கொடியை ஏந்தியவாறு டிராக்டர்கள் மூலம் கிராமப்புறங்களில் நடைபெற்ற இப்பேரணி கிராம மக்களிடையே நிச்சயம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்’ என்றார்.

இதையும் படிங்க:வீரமரணம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி - முதலமைச்சர் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.