கோவை மாவட்டம், கிணத்துக்கடவில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், ஊரக அளவிலான மகளிர் கூட்டமைப்பிற்கு இரண்டு டிராக்டர்கள் வாடகை மையங்களுக்கு வழங்கப்பட்டன. இதற்காக, பொள்ளாச்சி வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 16 லட்சம் ரூபாயும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 3 லட்சம் ரூபாயும், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு சார்பில் 1 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் துணை சபாநாயகர், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டு குழுக்களின் பொறுப்பாளர்களிடம் சாவிகளை வழங்கினார்.