தமிழ்நாடு சுற்றுலாத் தலங்களில் பிரபலமானது ஆனைமலை புலிகள் காப்பகம். இங்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இதில் குறிப்பாக, வால்பாறை செல்லும் முன் அங்கு அமைந்துள்ள குரங்கு நீர்வீழ்ச்சியில் மக்கள் குடும்பத்துடன் சென்று குளித்து மகிழ்வது வழக்கம்.
இந்நிலையில், ஆறு மாத கால கரோனோ ஊரடங்கைத் தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு தளர்வுகளை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, ஆழியார் சோதனைச்சாவடியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வால்பாறை செல்லக் குவிந்தனர். தீவிர சோதனைக்கு பிறகு மக்களை இந்த சுற்றுலாத் தலங்களுக்கு வனத்துறையினர் அனுமதித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தொடர் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு அனுமதி!