ETV Bharat / state

ஆனைமலை புலிகள் காப்பகம்: பாகனை கொன்ற யானை கரேலில் அடைப்பு

ஆனைமலை புலிகள் காப்பகம் உலர்ந்தி டாப்சிலிப் பகுதியில் அசோக் என்று பெயரிடப்பட்ட யானை தனது பாகனை கொன்ற நிலையில், அசோக் யானை மற்றும் பாகன் சொல்லுக்கு கட்டுப்படாத மற்றொரு யானை என 2 வளர்ப்பு யானைகளை கரேலில் அடைத்துள்ளனர்.

யானைகள் கரேலில் அடைப்பு
யானைகள் கரேலில் அடைப்பு
author img

By

Published : Jan 30, 2022, 9:49 AM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகத்திற்கு உடபட்ட டாப்சிலிப் கோழிகமுத்தி பகுதியில் கும்கி கலிம் சின்னதம்பி, அரிசி ராஜ என 27 வளர்ப்பு யானைகளை வனத்துறையினர் பராமரித்து வருகிறது.

டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் இருந்து அசோக் (12), சுயம்பு (23) ஆகிய இரண்டு யானைகளையும் பாகன் கட்டளைக்குகீழ் படியாததால், வரகளியாறு யானைகள் முகாமில் லாரி மூலம் கொண்டுசென்று கரோலில் வைத்து சுமார் ஒரு மாதம் வைத்து பழக்கபடுத்த, கோவை மாவட்ட ஆனைமலை புலிகள் காப்பகம் கள இயக்குநர் ராமசுப்பிரமணியம் உத்தரவிட்டார்.

யானைகள் கரேலில் அடைப்பு

அதன்பேரில், துணை கள இயக்குநர் அறிவுறுத்தலின்படி வனச்சரகர் காசிலிங்கம் முன்னிலையில் இரண்டு யானைகளும் கரோலில் அடைக்கப்பட்டன. அசோக் என்ற யானைக்கு மணிகண்டன், கண்ணண் ஆகிய இருவரும், சுயம்பு என்ற யானைக்கு பிரசாத், சுரேஷ் ஆகிய இருவரும் பாகன்களாக கால்நடை மருத்துவர் சுகுமார் ஆலோசனையின் பேரில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

அசோக் யானை கடந்த சில தினங்களுக்கு முன்பு பாகன் ஆறுமுகம் என்பவரை கொன்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரோட்டில் திடீரென நடந்து வந்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.