ETV Bharat / state

கணியூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் மக்கள் செல்ல தனிப்பாதை வேண்டும் - சூலூர் எம்எல்ஏ கோரிக்கை! - கணியூர் சுங்கச்சாவடி எம்எல்ஏ கந்தசாமி கோரிக்கை

கணியூர் சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்ய வேண்டும், இல்லையென்றால் சுற்றுவட்டார கிராம மக்கள் செல்ல தனிப்பாதை அமைத்து தர வேண்டும் என சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கந்தசாமி, மத்திய நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அனைத்துக் கட்சி கூட்டம்
அனைத்துக் கட்சி கூட்டம்
author img

By

Published : Dec 28, 2020, 5:44 PM IST

கோயம்புத்தூர்: சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில், கோவை மாவட்டம் கணியூரில் சுங்கச் சாவடி ஒன்று அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடியைச் சுற்றி 20 கி.மீ., வரையுள்ள கிராமங்களுக்கு சுங்கச்சாவடி வழியாக பயணம் செய்ய மாதாந்திர கட்டணமாக ரூ. 275 நிர்ணயம் செய்யப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் பேரில், கணியூர் சுங்கச்சாவடியில் 10 கிலோ மீட்டருக்கு 150 ரூபாய் கட்டணம் வசூலிக்க வேண்டும் என உத்தரவு போடப்பட்டது.

உள்ளூர் மக்களுக்கு இலவச அனுமதி

ஜனவரி 1ஆம் தேதி முதல் பாஸ்ட் ட்ராக் முறையை அமல்படுத்த உள்ள நிலையில் கணியூர் சுங்கச்சாவடி சுற்றி உள்ள அரசூர், கணியூர் கருமத்தம்பட்டி, கிட்டாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த வாகன ஓட்டிகளுக்கு இலவச அனுமதி வழங்கிட வேண்டும் என கடந்த சில தினங்களாக கோரிக்கை எழுந்துள்ளது.

கணியூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என, இரண்டு தினங்களுக்கு முன் நள்ளிரவில் சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்து இரண்டு நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுங்கச் சாவடி நிர்வாகத்தினர் தெரிவித்திருந்தனர்.

அனைத்து கட்சி கூட்டம்

இந்நிலையில், உள்ளூர் மக்களை சுங்கச்சாவடியில் இலவசமாக அனுமதிப்பது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் நடைபெற்றது. சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

அப்போது, காலம் காலமாக பயன்படுத்தி வந்த பாதையை விட்டு தர முடியாது. சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட வேண்டும் அல்லது சர்வீஸ் சாலை அமைத்து தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

சுங்கசாவடியை இடமாற்ற வேண்டும்

கூட்டத்தில் பேசிய சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர், உள்ளூர் மக்கள் காலங்காலமாக பயன்படுத்தி வருவதால் சுங்க சாவடியில் விலக்கு அளிக்க வேண்டும் அல்லது சுங்க சாவடியை வேறு இடத்துக்கு மாற்றிக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து இதுதொடர்பாக முதலமைச்சரைச் சந்தித்து நேரில் பேச உள்ளதாகவும் தெரிவித்தார். சுங்கச்சாவடியில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஊழியர்கள், வாகன ஓட்டிகளிடம் கடுமையாக நடந்துகொள்கின்றனர் என குற்றம்சாட்டி அவர் இதுபோன்ற நடவடிக்கைகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட திமுக முடிவு - எம்எல்ஏ கார்த்தி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.