தமிழ்நாடு - கேரள மாநில எல்லைப் பகுதியான பொள்ளாச்சியில் கேரளாவில் இருந்து கோழி, மீன், மருத்துவ உள்ளிட்ட கழிவுப் பொருட்களை கொட்டி செல்வது தொடர்கதையாகிவருகிறது.
இந்நிலையில் நேற்று (ஜூன் 6) கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து கோழிக் கழிவுகள் பொள்ளாச்சிக்கு கொண்ட கொண்டுவரப்படுவதாக வருவாய்த் துறைக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து பொள்ளாச்சியில் வருவாய்த் துறையினர் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பொள்ளாச்சி கோவை சாலையில் கோழிக் கழிவுகளை ஏற்றி வந்த லாரியை, வருவாய்த் துறையினர் பிடித்தனர்.
அதிலிருந்த கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த ஓட்டுநர் முகமது பஷீர், சிபின் உள்ளிட்ட மூன்று பேரை பிடித்து பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.