கோவை நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணன் வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
சி.பி ராதாகிருஷ்ணன் பேட்டி
அப்போது அவர் கூறியதாவது,
"ஜனநாயகத்தில் மிகப்பெரிய பலமே தேர்தல்கள் உரிய நேரத்தில் உரிய முறையில் நடத்தப்படுவதுதான். கடந்த காலங்களில் சின்ன சின்ன தவறுகள் நடந்து இருந்தாலும் தேர்தல் கமிஷனால் ஒன்றன் பின் ஒன்றாக அவைகள் அகற்றப்பட்டு வருகின்றன. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்ற எண்ணம் மக்களிடையே மேலோங்கியுள்ளது. மோடியின் 5 ஆண்டு ஆட்சியில் விலைவாசி உயர்வு இல்லாத காலமாக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் உலக வங்கியில் கடன் வாங்காத பிரதமர் என்ற பெயரை மோடி பெற்றுள்ளார்.
கோடிக்கணக்கான மக்களுக்கு இலவச கேஸ் இணைப்பு, கழிவறை, மின்னிணைப்பு தரப்பட்டு உள்ளது. 2024 ஆம் ஆண்டுக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் வீடு திட்டம் நிறைவேற்றப்படும். முதலமைச்சர், துணை முதலமைச்சர், பாரதப் பிரதமர் உள்ளிட்டோர் தேர்தல் பரப்புரைக்காக கோவைக்கு வர உள்ளனர். எங்களின் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்றாகவே நாங்கள் கருதுகிறோம்" என்றார்.