தமிழ்நாடு வனத் துறையில் தேர்வாகிய 597 வனவர்; வனக்காவலர்களுக்கான பயிற்சி கோவை குரும்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதனை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் பார்வையிட்டனர். இதில் மாணவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை அமைச்சர்கள் பார்வையிட்டு, சான்றிதழ்களை வழங்கினர்.
பின்னர் பேசிய எஸ்.பி. வேலுமணி, 'தமிழ்நாடு முழுவதும் கடுமையான வறட்சி நிலவுகிறது. தண்ணீர் சிக்கல்கள் இருக்கும் இடங்களில் எங்கு ஆழ்துளை கிணறுகள் தேவையோ, அங்கெல்லாம் அமைக்கப்பட்டுவருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் போதிய தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மழை பெய்து 190 நாட்களாகிவிட்டது என்பதால் அங்கு நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. இதனால் சென்னையில் ஏற்பட்டுள்ள தண்னீர் சிக்கல்களை தீர்க்க, லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டுவருகிறது. மேலும் தண்ணீர் சிக்கல்களை தீர்க்க ஆய்வுகள் நடக்கிறது' என்றார்
.