தமிழ்நாடு முழுவதும் லாட்டரிகள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், சிலஇடங்களில் லாட்டரி விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம், அன்னூரில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு அன்னூர் அடுத்த செல்லப்பம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் குடோனில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது குடோனில் ஆன்லைன் மூலம் பணத்தை கட்டி லாட்டரி குலுக்கலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு இருந்த 14பேரை கைது செய்த தனிப்படையினர் ரூ.1லட்சம் ரொக்கம், 10 இருசக்கர வாகனங்கள், மினி ஆட்டோக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.