கோவை: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள ஜீரஹள்ளி வனப்பகுதி ஜோரைக்காடு ஓடையில் புலி ஒன்று இறந்து கிடந்துள்ளது. தகவலறிந்து சென்ற வனத்துறையினர், புலியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
புலி உயிரிழப்பு தொடர்பாக தகவல் பரவியதையடுத்து, அருகிலுள்ள கிராமமக்கள் அதிகளவில் திரண்டனர். கூட்டம் அதிகமானதைத் தொடர்ந்து, கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு உடற்கூராய்வு செய்யப்பட்டது.
![அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட புலியின் சடலம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13908169_tigerr.jpg)
இப்பகுதியில் மாடுகளை புலி வேட்டையாடி அடித்துக் கொல்வது வழக்கம் . அதனால் மாடுகளின் வேட்டையாடப்படுவதை தடுக்கும் வகையில், இறைச்சி மூலம் விஷம் வைத்து புலி கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதனையடுத்து அண்மையில் திகினாரையில் புலி வேட்யையாடி உயிரிழந்த மாடுகள் இறப்பால் பாதிக்கப்பட்ட உரிமையாளர்கள் குறித்து வனத்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து - சிதைவு பாகங்கள் சேகரிப்பு