கோவை முட்டத்துவையல் பகுதியில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்ய ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், ஈஷா யோகா மையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்தார்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மனிதகுலம் தோன்றியதற்குப் பின்னர் ஆயுதங்களுடன் சண்டையிட்டு கலவரமின்றி ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதற்காக தேர்தல் முறை வந்தது. இதனை அனைத்து மக்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆட்சி மாற்றத்தை விரும்பினால், வாக்களிப்பதன் மூலம் மாற்றத்தை அளிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.
ஜனநாயக நாட்டில் ஓட்டுரிமையை அனைவரும் பயன்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் 12 ஆயிரம் கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அரசின் கைவசம் உள்ள கோயில்களை ஒப்படைக்க வேண்டுமென்று மூன்றரை கோடி மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். எனவே ஆட்சியாளர்களும் கோயில்களை அரசிடமிருந்து ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைக்கு தமிழ்நாடு முழுவதும் பலத்த ஆதரவு கிளம்பியுள்ளது. வாக்குரிமையை மக்கள் பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்" என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேரூர் இளைய பட்ட ஆதினம் மருதாசல அடிகளார் அரசு ஆரம்பப் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்த தொண்டமுத்தூர் வேட்பாளரும் உள்ளாட்சி துறை அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி வாக்குச்சாவடிகளில் உள்ள அதிமுக முகவர்களிடம் வாக்குப்பதிவு குறித்து கேட்டறிந்தார். பின்னர் ஈடிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் அதிமுகவினரால் தாக்கப்பட்டதாக சீன் போடுகிறார் அதெல்லாம் ஒரு விஷயமே அல்ல என கூறிச் சென்றார்