ETV Bharat / state

'எங்கும் தமிழ் மணம் கமழவும், ஆன்மிகத்தில் தமிழ்நாடு முதன்மை பெறவும் இந்த ஆட்சி துணையாக உள்ளது'

பேரூர் ஆதினத்தில் நடந்த அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சிப் பள்ளி மாணவர்களுக்கு சிவதீட்சை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர் பாபு, எங்கும் தமிழ் மணம் கமழவும், ஆன்மிகத்தில் தமிழகம் முதன்மை பெறவும் இந்த ஆட்சி துணையாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

This government is helping to spread the Tamil spirit everywhere and Tamil Nadu to be the foremost in spirituality
எங்கும் தமிழ் மணம் கமழவும், ஆன்மிகத்தில் தமிழகம் முதன்மை பெறவும் இந்த ஆட்சி துணையாக உள்ளது - அமைச்சர் சேகர் பாபு
author img

By

Published : Feb 7, 2023, 8:35 PM IST

'எங்கும் தமிழ் மணம் கமழவும், ஆன்மிகத்தில் தமிழகம் முதன்மை பெறவும் இந்த ஆட்சி துணையாக உள்ளது' - அமைச்சர் சேகர் பாபு

கோயம்புத்தூர்: பேரூர் பட்டீசுவர சுவாமி கோயிலில் உள்ள கல்யாணி யானைக்கு புதிதாக கட்டப்பட்ட குளியல் தொட்டியை அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்தார். இதையடுத்து பேரூர் ஆதீனத்தில் நடந்த அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சிப் பள்ளி மாணவர்களுக்கு சிவதீட்சை வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் சேகர் பாபு, ”84 அர்ச்சகர்கள் மற்றும் ஓதுவார்களுக்கு தீட்சை அளித்தது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த 2006-ம் ஆண்டில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் துவக்க அரசாணை வெளியிட்டார். பின்னர் 2007-ம் ஆண்டு அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் துவங்கப்பட்டன.

கடந்த காலங்களில் பள்ளிகளில் மாணவர்கள் பயிற்சி பெற தரம் இல்லாத நிலை இருந்தது. இந்த பள்ளிகளை மேம்படுத்தவும், புதிய பள்ளிகள் துவக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, 5 நிலையில் பயிற்சி பெற 15 பள்ளிகள் துவங்கப்பட்டன. அப்பள்ளிகளில் 210 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். எங்கும் தமிழ் மணம் கமழவும், ஆன்மிகத்தில் தமிழகம் முதன்மை பெறவும் இந்த ஆட்சி துணையாக உள்ளது.

இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் உள்ள 27 திருக்கோயிலில் 29 யானைகள் பராமரிக்கப்படுகிறது. அந்த யானைகளுக்கு குளியல் தொட்டிகள், நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவர் பரிந்துரைப்படி உணவு வழங்கப்படுகிறது. திமுக தலைமையிலான இந்த அரசு மனிதர்கள், யானைகள் நலன் காக்கும் அரசாக உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையில் இருந்த தொய்வான நிலையை அகற்றி, பக்தர்களின் அடிப்படைத் தேவைகளை அரசு நிறைவேற்றி வருகிறது'' எனக் கூறினார்.

அமைச்சர் சேகர் பாபு பழநி தண்டாயுதபாணி திருக்கோயில் கருவறைக்குள் அத்துமீறி நுழைந்ததாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, 'ஊடகங்களில் வர வேண்டும் என்பதற்காக விஷமத்தனமான செய்திகளை வெளியிடுவது தான் அவரது வாடிக்கையாக உள்ளது. வெளிநாட்டில் இருப்பவர்களும் பாராட்டும் வகையில் சிறப்பாக பழனி திருக்கோயிலின் கும்பாபிஷேகம் நடந்தது. அதில் கரும்புள்ளி ஏற்படுத்த வேண்டும் என அர்த்தமற்ற செய்தியை வெளியிட்டது மிகவும் வருத்தமளிக்கிறது. அனைவரும் சமம் என்ற நிலையை உருவாக்கியதாலும், திருக்கோயிலை வைத்து வருமானம் பார்ப்பவர்களை முடக்கியதாலும் தேவையற்ற செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது'' எனத் தெரிவித்தார்.

மேலும், ''பழநிக்கு பெருந்திட்ட வரைவு தயார் செய்யப்பட்டுள்ளது. அதற்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். யானைகள் புத்துணர்வு முகாம் தேவையற்ற ஒன்றாகி விட்டது. கோயில்களிலேயே யானைகளுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. சிவராத்திரி விழா ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. 5 இடங்களில் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.

மருதமலை கோயில் அறங்காவலர் விரைவில் நியமனம் செய்யப்படுவார். 17 திருக்கோயில்களுக்கு அறங்காவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விரைவில் அனைத்து கோயில்களிலும் நியமனம் செய்யப்படுவார்கள். கோயில்களில் சிறப்புக் கட்டணம் ரத்து செய்யும் நிலையில், பூஜை உள்ளிட்டவை பாதிக்காத நிலையில் செய்யப்படும். சிறப்பு கட்டணத்தை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மருதமலை கோயிலில் லிஃப்ட் அமைக்க டெண்டர் முடிந்துள்ளது. அடுத்த மாதம் பணிகள் துவக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "தனி தமிழீழம் தான் தமிழ்நாட்டு மக்களின் இறுதி முடிவு" - திருமுருகன் காந்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.