கோவையில் கரோனா வைரசால் மாணவி ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்புப் பணிகளைப் பார்வையிட்டப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாவட்ட ஆட்சியர் ராசாமணி பேசுகையில், கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய சிகிச்சை அளித்துவருவதாகவும், தற்போது அவர் நலமுடன் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும் அறிவுறுத்தினார்.
மாவட்டத்தில் உணவகங்கள், வணிக வளாகங்கள் மூட உத்தரவிட்டுள்ளதாகவும் கூறிய அவர், தமிழ்நாடு - கேரள எல்லைகள் மூடப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் நடைபெற்றுவருவதாகவும் தெரிவித்தார்.
கோவையில் தற்போது கட்டாய ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய நிலை வரவில்லை எனவும், மக்கள் வதந்திகளை நம்பாமல் இருக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: இயல்பு நிலைக்கு திரும்பிய விழுப்புரம்