ETV Bharat / state

மருதமலை அடிவாரத்தில் உள்ள குப்பைக்கிடங்கினால் வனத்திற்குள் தீ பரவும் அபாயம்!

மருதமலை அடிவாரத்தில் உள்ள கிராம மக்கள் குப்பைக் கிடங்கிற்கு தீ வைப்பதால் வனத்திற்குள் தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மருதமலை அடிவாரத்தில் உள்ள குப்பை கிடங்கினால் வனத்திற்குள் தீ பரவும் அபாயம்!!
Etv Bharat
author img

By

Published : Apr 18, 2023, 7:37 PM IST

மருதமலை அடிவாரத்தில் உள்ள குப்பை கிடங்கினால் வனத்திற்குள் தீ பரவும் அபாயம்!!

கோவை: வடவள்ளியை அடுத்த மருதமலை பகுதியில் வனப்பகுதியை ஒட்டிய சொமையம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் குப்பைக் கிடங்கை அமைத்துள்ளது. மேலும் இந்த ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு தான் கொட்டப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக வனத்தில் இருந்து வெளியேறும் மான், யானை உள்ளிட்ட வன விலங்குகள் குப்பைக் கிடங்கில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிடுவதால் உடல் நலம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஆண்டு அந்தப் பகுதியில் யானைகளின் சாணத்தில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து குப்பைக் கிடங்கை அகற்றுமாறு வனத்துறையினர் சொமையம்பாளையம் ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினர். எனினும், வனத்துறையின் கோரிக்கையை ஏற்காத ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து அங்கேயே குப்பைகளை கொட்டி வருகிறது.

மேலும் அதிக அளவு குப்பைகள் சேரும்போது அதற்கு தீ வைக்கும் சம்பவங்களும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மரம், செடி, கொடிகள் காய்ந்து கடும் வறட்சி நிலவுவதால் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது. இந்தச் சூழலில் குப்பைக் கிடங்கில் வைக்கப்படும் தீ வனப்பகுதியில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வனத்துக்குள் தீ பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை வனத்துறையினர் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் செயலால் மருதமலை வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மதுக்கரை வனச்சரகம் ஆலந்துறை வனப்பகுதியில் பற்றி எரியும் தீயை அணைக்க வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தச் சூழலில் விமானப்படை ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு, தீயை அணைக்க முயன்றும் தொடர்ந்து தீ எரிந்து வருகிறது. ஆலந்துறை வனப்பகுதியில் எரியும் தீ 90 சதவீதம் கட்டுக்குள் வந்துள்ள நிலையில் அதனை முழுவதுமாக அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சூழலில் தான் மருதமலை பகுதியில் உள்ள குப்பைக்கிடங்கிற்கு தீ வைப்பதால், வனப்பகுதியில் தீ பரவும் சூழல் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக இதனைத் தடுக்க வனத்துறையும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சூழலியல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் அங்கு அப்புறப்படுத்தப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் யானைகளின் சாணத்தில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளதால் இதனையும் கருத்தில் கொண்டு குப்பைக் கிடங்கை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் நடவடிக்கை எடுக்காவிட்டால் பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிடும் யானை உள்ளிட்ட விலங்குகள் உயிரிழக்க நேரிடும் எனவும் சூழ்நிலையியல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கோவையில் ஆறாவது நாளாக எரியும் காட்டுத் தீ; ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.