ETV Bharat / state

படம் பார்க்க வந்தவரை அனுமதிக்காத திரையரங்கிற்கு ரூ.5000 அபராதம்..! - திரையரங்கிற்கு அபராதம்

திருப்பூரில் குடும்பத்துடன் திரைப்படம் பார்க்க வந்த நபரை மதுபோதையில் இருந்ததாக திருப்பி அனுப்பிய திரையரங்க நிர்வாகத்திற்கு அபராதம் விதித்து திருப்பூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திரைப்படம் பார்க்க குடித்துவிட்டு வந்தவரை அனுமதிக்காத திரையரங்கிற்கு அபராதம்..!

author img

By

Published : Sep 10, 2022, 8:34 PM IST

திருப்பூர்: யூனியன் மில் சாலையில் அமைந்துள்ள ‘ஸ்ரீ சக்தி மல்டிபிளக்ஸ்’ திரையரங்கில் 2019ஆம் ஆண்டு வெளியான ‘பிகில்’ படத்தைக் காண 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் செல்வநாயகம் என்பவர் தனது குடும்பத்துடன் சென்றார். அப்போது இணையதளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்திருந்த நிலையில் செல்வநாயகம் தனது குடும்பத்துடன் சென்றபோது மதுபோதையில் இருந்ததாக அவர்களை படம் பார்க்க திரையரங்கு நிர்வாகம் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியது.

மேலும், டிக்கெட் பணத்தையும் திருப்பி வழங்காமல், மாற்றுக் காட்சிக்கும் ஏற்பாடு செய்யாமல் திருப்பி அனுப்பியதால் செல்வநாயகம் இது குறித்து 2020ஆம் ஆண்டு திருப்பூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் திருப்பூர் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதில், செல்வநாயகத்திற்கு மனவுளைச்சல் ஏற்படுத்தியதற்காக திரையரங்கு நிர்வாகத்திற்கு 5ஆயிரம் ரூபாய் அபராதமும் வழக்கு செலவுக்காக 5 ஆயிரம் ரூபாய் மற்றும் டிக்கெட் முன்பதிவு கட்டணம் 289 ரூபாயையும் செல்வநாயகத்திற்கு திருப்பி வழங்க திருப்பூர் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதையும் படிங்க: "கல்யாணத்துக்கு பிறகும் கிரிக்கெட்" - மணப்பெண்ணிடம் ஒப்பந்தம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.