கோயம்புத்தூர் சூலூர் விமான நிலையத்தில் பீகாரைச் சேர்ந்த கேம்ராம் சிங் என்பவர் பணியாற்றிவருகிறார். இவருக்கு சீமா குமாரி என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். இவரது மூத்த மகன் 11ஆம் வகுப்பும், இரண்டாவது மகன் 9ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் பள்ளியில் சேட்டைகள் செய்தது, செல்போனை பயன்படுத்தியதாகக் கூறி, கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் இருவரையும் தொடர்ச்சியாக அடித்து, மன ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து நேற்று (12.12.19) பள்ளிக்கு சென்ற மூத்த மகனை பள்ளியின் முதல்வர் மேகநாதன் மாணவனின் பேண்ட்டை கழட்டி பின்புறம் அடித்து கையே உள்ளே விட்டதாகவும், பிறப்பு உறுப்பில் அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இந்நிலையில், அரசு மருத்துவக்கலூரி மருத்துவமனையில் சகோதரர்கள் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். தங்களது இரு மகன்களையும் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் உடல் மற்றும் மன ரீதியாக கொடுமைப்படுத்துவதாகவும், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய முதல்வரிடம் கேள்வி கேட்ட மாணவர்களின் தாய் சீமா குமாரியின் செல்போனையும் பறித்துக்கொண்டதாகவும் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர்களின் தாயார் சீமா குமாரி கூறுகையில்,
"எனது மகன்களை துன்புறுத்தியும் குழந்தைகளின் படிப்பு வீணாகிவிடக் கூடாது என்பதற்காகவே மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்தோம். ஆனால், மீண்டும் மீண்டும் துன்புறுத்தி, எனது பெரிய மகனை 10ஆம் வகுப்பில் வேண்டுமென்றே தேர்வில்யடைய வைத்து, ரிசல்ட்டையும் கொடுக்கவில்லை. மதிப்பெண் பட்டியல் கேட்டு சென்ற என்னை, சூலூர் பெண் காவலர்களை வைத்து தோள்பட்டையில் அழுத்தி கொடுமைப்படுத்தினர்.
கேந்திரிய வித்யாலயா பள்ளியின் தலைவரிடம் இதுகுறித்து புகாரளித்தோம். ஆனால், அவர் முதல்வர் மேகநாதனுக்கு ஆதரவாக செயல்படுகிறார். எனது மகனை அடித்து, மொபைல் பறித்தது குறித்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகாரளித்தும் முதல் தகவல் அறிக்கை கொடுக்கப்பட்டது. இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தொடர்ச்சியாக காவல் துறையிடம் கேட்டாலும் உரிய பதில் கிடைக்கவில்லை.
விமான நிலைய அலுவலர்கள், கேந்திரிய வித்யாலயா பள்ளியின் தலைவர் உள்பட அனைவரும் முதல்வருக்கு சாதகமாக செயல்படுகின்றனர். எனவே எனக்கு நீதி வேண்டும். என் மகன்களுக்கு நேர்ந்த கொடூர சம்பவம் வேறு யாருக்கும் நிகழக் கூடாது" என்றார்.
இதையும் படிங்க: மங்கும் மனித உரிமைகள்.!