கோவை: நேற்று வியாழக்கிழமை இரவு 11.15 மணிக்கு ரயில் நிலைய நடை மேடை எண் 3இல் வண்டி எண் 16528 கண்ணூரில் இருந்து யஸ்வந்த்பூர் செல்லும் ரயில் வண்டியில் சேலத்தைச்சேர்ந்த சிவகுமார், இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டதாக நினைத்து ஓடும் இரயிலில் இருந்து இறங்க முயற்சிக்கையில், தண்டவாளத்தில் சிக்கப் பார்த்தார்.
இதனையடுத்து கண் இமைக்கும் நேரத்தில் அசம்பாவிதத்தில் இருந்து ரயில்வே போலீசாரால் காப்பாற்றப்பட்டார். இதனால் சிவகுமார் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.
பின்னர் சிவகுமார் மீட்ட ரயில்வே போலீசார், அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கண் இமைக்கும் நேரத்தில் விபத்துக்குள்ளான நபரை ரயில்வே காவலர்கள் காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
இதையும் படிங்க: கோவை மாவட்ட பாஜக தலைவர் மீது வன்கொடுமை வழக்குப்பதிவு!