மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 73ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கோயம்புத்தூர் பேரூர் பகுதியில் 123 ஏழை, எளிய ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி பிப்.15ஆம் தேதி நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி கலந்துகொள்ளவுள்ளார்.
இதனையொட்டி அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேடைகளை பார்வையிட்ட அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பில்லை. முதலமைச்சராக மீண்டும் அண்ணன் எடப்பாடி பழனிசாமிதான் நீடிப்பார். எது செய்தாலும் நான் சொல்லித்தான் செய்யப்பட்டது என்று கேவலமான விளம்பரத்தை தேடக்கூடிய நிலையில் மு.க. ஸ்டாலின் இருக்கிறார்.
திமுகவை வீழ்த்த கூடிய ஒரே சக்தி அண்ணன் எடப்பாடியார்தான். முதலமைச்சர் செய்கின்ற பல்வேறு திட்டங்களை கண்டு மு.க.ஸ்டாலின் பயப்படுகிறார். ஸ்டாலின் சொன்னால் சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங் கேட்கும் சூழல் இருந்தும்கூட ஸ்டாலின் 7 பேர் விடுதலை குறித்துப் பேசவில்லை.
இலங்கை தமிழர் பிரச்னைகளை தீர்க்கவில்லை. விடுதலை புலிகள் பிரபாகரனின் தாயார் சிகிச்சைக்காக வந்தபோது அவர்களை திருப்பி அனுப்பிய அரசு திமுக அரசு” என்றார்.
இதையும் படிங்க: ’ஜனநாயக நாட்டில் யாரும் யாரையும் அடக்குமுறை செய்ய முடியாது': முதலமைச்சர் பழனிசாமி