கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஜமீன் கோட்டாம்பட்டி ஊராட்சியில் பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தினை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
இதில் ஜமீன் கோட்டாம்பட்டி ஊராட்சியில் 585 பெண் பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டன. பயனாளி ஒருவருக்கு 12 ஆயிரத்து 740 ரூபாய் வீதம் 585 பயனாளிகளுக்கு 74 லட்சத்து 52 ஆயிரத்து 900 ரூபாய் மதிப்பீட்டில் ஒருவருக்கு தலா நான்கு ஆடுகள் வீதம் வழங்கப்பட்டன.
இதன் பின்னர் நஞ்சை கவுண்டன் புதூர் பகுதியில் சமுதாய நலக்கூடம் மற்றும் கோமங்கலம் புதூர், திப்பம்பட்டி, கூள நாயக்கம்பட்டி, ஆகிய பகுதிகளில் சாலை பணிகளுக்காக பூமி பூஜை போடப்பட்டது.
இதையும் படிங்க: முன்னோர்கள் பயன்படுத்திய தமிழ் எண்கள் - மைல் கற்களால் வெளியான தகவல்