கோவை முத்துசாமி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் - மகேஸ்வரி தம்பதியினர் மளிகை பொருட்கள் வாங்க நேற்றிரவு ராஜவீதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். பொருட்களை வாங்கிவிட்டு வீட்டிற்குச் செல்ல வாகனத்தை எடுத்தபோது வாகனம் பஞ்சராகியுள்ளதை கவனித்துள்ளனர்.
எனவே பஞ்சர் போடுபவரை செல்ஃபோனில் அழைத்த செல்வராஜ், அவர் வரும் வரை அருகில் காத்திருந்தனர். அப்போது செல்வராஜின் வாகனத்தை ஒருவர் திருட முயன்றுள்ளார். இதை பார்த்த அவர் சத்தம் போட்டதில், அப்பகுதி மக்கள் திருட முயன்ற அந்த நபரை பிடித்து பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ராஜவீதி பகுதி, மக்கள் கூட்டம் நிறைந்த பகுதி என்பதால் இது போன்ற திருட்டுச் சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: நூதன முறையில் கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்!