கோவை: போளுவாம்பட்டி வனச்சரகத்திலிருந்து இரண்டு காட்டு யானைகள் முட்டத்து வயல் பகுதியில் உள்ள குளத்தில் இறங்கின. இந்த யானைகள் தாணிகண்டி என்னும் பழங்குடியினர் குடியிருப்பு வழியாக இந்தக் குளத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த வனத் துறையினர் யானைகளைக் கண்காணித்தனர். அதனைத் தொடர்ந்து வனத் துறை பணியாளர்கள் மூன்று குழுக்களாகப் பிரிந்து குளத்தைச் சுற்றிலும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவந்தனர். குளத்திலிருந்து யானைகளை வெளியேற்றவும் முயற்சி மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் நீண்ட நேரத்திற்குப் பின்னர் யானைகள் இரண்டும் குளத்திலிருந்து வெளியேறி மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றன.
மீண்டும் யானை குடியிருப்புப் பகுதிக்குள் வராமல் இருக்க, யானைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட உள்ளன. யானைகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறினால் உடனடியாக வனப்பகுதிக்குள் திருப்பியனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் வனத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 28 யானைகளுக்கு கரோனா இல்லை: யானைகள் முகாமில் வனத்துறை தகவல்