ETV Bharat / state

காதலி கண்ணெதிரே வாய்க்காலில் மூழ்கி உயிரிழந்த இளைஞன் - crime news

கோயம்புத்தூர்: காதலி கண்ணெதிரே காதலன் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாய்க்காலில் மூழ்கி உயிரிழப்பு
வாய்க்காலில் மூழ்கி உயிரிழப்பு
author img

By

Published : Mar 30, 2021, 10:05 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூரைச் சேர்ந்தவர் கதிர்வேல், கூலி வேலை செய்துவருகிறார். இவரும் சத்தியமங்கலம் அடுத்த நெகமம் காலனியைச் சேர்ந்த கல்லூரி மாணவி பிரியாவும் நீண்ட நாள்களாகக் காதலித்துவந்தனர்.

இந்நிலையில் கல்லூரிக்குச் செல்வதாக வீட்டைவிட்டு வெளியே வந்த பிரியா காதலன் கதிர்வேலுடன் உக்கரம் கீழ்பவானி வாய்க்காலில் குளிக்கச் சென்றனர். அங்கு இருவரும் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது கதிர்வேல் ஆழமான பகுதிக்குச் சென்றபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டார். நீரில் மூழ்கிய கதிர்வேலைக் காப்பாற்ற தனது துப்பட்டாவை வீசியுள்ளார். ஆனால் வேகமாக வந்த நீரில் அவர் அடித்துச் செல்லப்பட்டார்.

காணாமல்போன கதிர்வேல் குறித்து தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் வாய்க்காலில் இறங்கி தேடியபோது இறந்த நிலையில் கதிர்வேலை சடலமாக மீட்டனர்.

இதையும் படிங்க: என்.ஆர். காங்கிரஸ் பிரமுகருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.