கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்த பாஜக உறுப்பினர் நந்தா என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன் பெரியாரை இழிவுப்படுத்தும் வகையில் முகநூல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதனை கண்டிக்கும் வகையில், நேற்று முந்தினம் (ஜூலை22) அன்னூர் காவல் நிலையம் முன்பு தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.
பின் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர், நந்தாவை இரவிற்குள் கைது செய்கிறோம் என்று கூறியதால் கலைந்து சென்றனர்.
ஆனால் இன்று(ஜூலை24) வரை நந்தாவை காவல்துறை கைது செய்யாத நிலையில், இன்று சுமார் 50 க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நந்தாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அவரை கைது செய்யாமல் காவல்துறை காலம் தாழ்த்துகிறது எனவும் முழக்கங்களை எழுப்பினர். பின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர் திடீரென மாநகர காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் நோக்கி முழக்கங்களை எழுப்பி கொண்டே சென்றனர்.
அவர்களிடம் காவல்துறையினர் சமரச பேச்சு வார்த்தை நடத்தியதன் மூலம், ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர். அதன்பின் நான்கு பேர் மட்டும் கூடுதல் காவல் கண்காணிப்பாளரை சந்தித்து நந்தாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் விவசாய நிலங்கள் வழியே எரிவாயு குழாய் பதிக்க வலுக்கும் எதிர்ப்பு!