ETV Bharat / state

பாஜகவினர் வாகனப்பேரணியால் கோவையில் பதற்றம்

உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வருகையை ஒட்டி பாஜகவினர் கோவையில் நடத்திய இருசக்கர வாகனப் பேரணியால் இன்று பதற்றம் நிலவியது.

tensions-in-coimbatore-over-bjp-motorcycle-rally
பாஜகவினர் வாகனப்பேரணியால் கோவையில் பதற்றம்
author img

By

Published : Mar 31, 2021, 8:12 PM IST

கோவை: கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று கோவையில் பரப்புரை மேற்கொண்டார். இதையொட்டி, கோவை புலியகுளம் பகுதியில் இருந்து தேர்நிலைத் திடல்வரை 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் இருசக்கர வாகனப் பேரணியை நடத்தினர். இந்நிலையில், கோவை டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி பகுதியில் பேரணி வரும்போது, திறந்திருந்த கடைகளை மூட பாஜக வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதற்கு கண்டனம் தெரிவித்த இஸ்லாமிய மக்கள் டவுன்ஹால் பகுதியில், பேரணி வரும்போது எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். உடனடியாக இருதரப்பினரையும் காவல்துறையினர் சமாதானப்படுத்தினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டுவரும் சூழ்நிலையில், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அப்துல் வகாப் மாவட்ட ஆட்சியரிடமும், தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் புகார் அளித்தார்.

பாஜகவினர் வாகனப்பேரணியால் கோவையில் பதற்றம்

அந்தப்புகாரில் வானதி சீனிவாசனை தகுதி நீக்கம் செய்யவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் தமிழ்நாடு முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் எல்லாம் வரும்போது கடைகளை அடைக்கச் சொல்லி எவ்வித பிரச்னையும் வராத நிலையில், தற்போது உத்தரப் பிரதேச முதலமைச்சர் வருவதற்காக கடைகளை மூடச் சொல்வது எவ்வகையில் நியாயம் என சில வியாபாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

உத்தரப்பிரதேச முதலமைச்சர் வருகையை ஒட்டி டவுன்ஹால் பகுதியில் கண்காணிப்பு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இதையும் படிங்க: புலியகுளம் விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்த யோகி ஆதித்யநாத்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.