கோடைக்காலம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் ஆங்காங்கே பல இடங்களில் பரவலாக மழை பெய்துவருகிறது. கோவையிலும் பல்வேறு இடங்களில் மழை பெய்துவருகிறது. நேற்று இரவு 2 மணி முதல் கோவையில் வடவள்ளி சாய்பாபா காலனி, காரமடை, தடாகம், பீளமேடு, சுந்தராபுரம், போன்ற பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்தது. பல்வேறு இடங்களில் மின்சாரமும் தடையானது.
இந்நிலையில் கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ராமலிங்க செட்டியார் பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டுவந்த காய்கறி சந்தை முழுவதும் மழையினால் சேதம் அடைந்தது. இதனால் காய்கறி வியாபாரிகள் காய்கறிகளை விற்கவும் மக்கள் காய்கறிகளை வாங்கவும் பெரும் சிரமம் ஏற்பட்டது.
வழக்கமாக அந்தத் தற்காலிக சந்தையில் 50க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் இருப்பது வழக்கம். ஆனால் பள்ளி வளாகம் முழுவதும் மழையினால் சேதமடைந்த நிலையில், 20க்கும் குறைவான கடைகளே செயல்பட்டன. ஏற்கனவே கரோனா வைரஸினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு காய்கறி வியாபாரம் பெரிதளவு நஷ்டமடைந்த நிலையில் தற்போது பெய்து வரும் கனமழையும் நஷ்டத்தை ஈட்டி தருகிறது என்று வியாபாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க...ஊரடங்கால் பசியில் வாடும் நாடோடி மக்கள்!