ETV Bharat / state

ஒரு நாள் கடை அடைப்பில் அரசுக்கு 80 கோடி ரூபாய் நட்டமா? - kovai

கோவை: தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசுக்கு 80 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு நாள் கடை அடைப்பில் அரசுக்கு 80 கோடி ரூபாய் நட்டமா...
author img

By

Published : Aug 16, 2019, 7:24 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், டாஸ்மாக் ஊழியர் ராஜா என்பவர், சமூக விரோதிகளால் கடந்த 14ஆம் தேதி இரவு கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், டாஸ்மாக் கடைகளுக்கும், பணியாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு இல்லை என்று கூறி இன்று தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்து அரசுக்கு கிடைக்கும் 80 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு நாள் கடை அடைப்பில் அரசுக்கு 80 கோடி ரூபாய் நட்டமா...

அனைத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்த டாஸ்மாக் தொழிலாளர்கள் கூட்டமைப்பினர் இன்று கோவை பீளமேடு பகுதியில் உள்ள முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டதால், கோவையில் நாளொன்றுக்கு அரசுக்கு வருவாயாகக் கிடைக்கும் ரூ.7 முதல் ரூ.8 கோடி வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகையில், "படுகொலை செய்யப்பட்ட ஊழியரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும் அவரின் குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு அரசு வேலையும் அளிக்க வேண்டும். இரவு எட்டு மணிக்கே கடையை மூட உத்தரவிடவும் அனைத்து டாஸ்மாக்கிலும் சிசிடிவி கேமரா பொருத்தவும் ஊரகப் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் கூறினார்.

Intro:கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தம்Body:தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

ரூ.80 கோடி வருவாய் இழப்பு

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசுக்கு ரூ.80 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், டாஸ்மாக் ஊழியர் ராஜா என்பவர், சமூக விரோதிகளால் கடந்த 14ம் தேதி இரவு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில், டாஸ்மாக் கடைகளுக்கும், பணியாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு இல்லை என்று கூறி பாதுகாப்பு அம்சங்களை உடனே ஏற்படுத்தி தர வேண்டும் என்று வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதிலும் உள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்து கிடைக்கும் ரூ.80 கோடி வருவாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

கோவையை பொறுத்தவரையில் இங்குள்ள 300 க்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்படவில்லை. கோவையில் நாளொன்றுக்கு ரூ.7 முதல் ரூ.8 கோடி வரை அரசுக்கு வருவாய் கொடுக்கும் கடைகள் திறக்கப்படாததால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த டாஸ்மாக் தொழிலாளர்கள் கூட்டமைப்பினர் இன்று கோவை பீளமேடு பகுதியில் உள்ள முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தௌ முற்றுகையிட்டு ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், 200க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் கலந்து கொண்டு பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

இது குறித்து டாஸ்மாக் ஊழியர் ஜான் கூறுகையில், "படுகொலை செய்யப்பட்ட ஊழியரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வேண்டும். அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும். இரவு 8 மணிக்கு கடையை மூட உத்தரவிட வேண்டும். ஊரகப்பகுதிகளில் உள்ள கடைகளுக்க்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

அனைத்து டாஸ்மாக்கிலும் சி.சி.டி.வி காமிரா பொருத்த வேண்டும். பொருந்தாது மருத்து திட்டத்தை ரத்து செய்து புதிய மருத்துவ திட்டம் கொண்டுவர வேண்டும்." என்றார்.Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.