தமிழ்நாடு அரசின் உத்தரவை அடுத்து கோவை மாவட்டம் தெக்கலூர் பகுதியில் கோவை - திருப்பூர் மாவட்ட எல்லை மூடப்பட்டது. மாலை 6 மணிக்கு பிறகு வந்த அனைத்து வாகனங்களில் அத்தியாவசிய தேவைகளுக்குச் செல்லும் வாகனங்கள் தவிர அனைத்து வாகனங்களும் திருப்பி அனுப்பப்பட்டன.

இதேபோல், அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளைத் தவிர பிற கடைகள், நிறுவனங்கள் அடைக்கப்பட்டன.
சாலைகளிலும் கூட்டமாக செல்லும் மக்களைக் காவல் துறையினர் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு, எச்சரித்து திருப்பி அனுப்பிவருகின்றனர்.
இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவை பின்பற்றவில்லை எனில் ஓராண்டு சிறை