மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோயம்புத்தூர் அண்ணா சிலை அருகே உள்ள எம்ஜிஆரின் உருவச்சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில், கவுண்டம்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுக்குட்டி, கோவை தெற்கு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கோயம்புத்தூர் அதிமுக அலுவலகத்திலிருந்து 100-க்கும் மேற்பட்டோர் பேரணியாக நடந்துசென்று அண்ணா சிலை பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு ஆறுக்குட்டி, அம்மன் அர்ஜுனன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
'வாவ்... ஜல்லிக்கட்டு!' - அலங்காநல்லூரில் வியந்த வெளிநாட்டினர்
இதனைத்தொடர்ந்து அதிமுக அலுவலகத்தில் அதிமுகவினர் கட்சிக் கொடியை ஏற்றி எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.