ETV Bharat / state

கேரள எல்லையில் தமிழ் மாணவர்கள் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதுவதில் சிக்கல்!

கோயம்புத்தூர்: கேரள அலுவலர்களின் கெடுபிடி காரணமாக தமிழ்நாடு - கேரள எல்லையில் அமைந்துள்ள ஆனைக்கட்டி பகுதியில் தமிழ்நாடு மாணவர்கள் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

10ஆம் வகுப்பு தேர்வு எழுதுவதில் சிக்கல்
10ஆம் வகுப்பு தேர்வு எழுதுவதில் சிக்கல்
author img

By

Published : May 20, 2020, 7:36 PM IST

தமிழ்நாட்டில் ஜூன் 1ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள், ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதேசமயம் ஜூன் 1ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், மூடப்பட்டுள்ள வெளி மாநில எல்லைகள் திறக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு - கேரள எல்லையில் ஆனைக்கட்டி பகுதியில் பழங்குடியினர் உண்டு உறைவிட உயர் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, தமிழ்நாடு எல்லையை ஒட்டியுள்ள அட்டப்பாடி, சோலையூர், அகழி, கூலிக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆகவே, இந்த மாணவர்கள் ஜூன் 15ஆம் தேதி தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதற்கு காரணம் ஆனைக்கட்டியில் உள்ள சோதனைச் சாவடியில் கேரள அலுவலர்கள் அதிக கெடுபிடியில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் இ-பாஸ் பெற்று ஜூன் 15ஆம் தேதி தேர்வுக்காக பள்ளிக்குச் சென்றாலும் கேரள அலுவலர்கள் உள்ளே அனுமதிப்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆகவே தமிழ்நாடு, கேரள அரசுகள் இது குறித்து பேசி முடிவெடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்னர்.

இதையும் படிங்க: சுமார்100 புலம்பெயர்ந்த தொழிலார்கள் மீண்டும் கேரளாவுக்கே திருப்பி அனுப்பிவைப்பு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.