ETV Bharat / state

ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொழில்துறை அமைப்புகள் கோவை ஆட்சியரிடம் மனு! - coimbatore news today in tamil

Tamil Nadu Industrial Organisations petition to collector: சிறு, குறு தொழில் துறையின் மின்சார கட்டண முறைகளை மாற்றி அமைத்திட வேண்டும் எனத் தமிழ்நாடு தொழில்துறை அமைப்புகள் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

petition-to-coimbatore-collector-demanding-fulfillment-of-various-demands
மின்கட்டண உயர்வு: ஏழு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கோவை ஆட்சியரிடம் மனு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2023, 7:53 PM IST

ஏழு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கோவை ஆட்சியரிடம் மனு

கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பீக் ஹவர் மின் கட்டணத்தை ரத்து செய்தல், மின்சார நிலை கட்டண உயர்வைத் திரும்பப்பெறுதல், ஆண்டுதோறும் 6 சதவீதம் மின் கட்டண உயர்வு நடைமுறையை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதனை நிறைவேற்ற வலியுறுத்தி (செப்.25-ம் தேதி) தமிழ்நாடு முழுவதும் ஒருநாள் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்துவதாக தொழில்துறை அமைப்புகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, கடந்த (செ.23) மின் கட்டண முறைகளை மாற்றி அமைத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். ஆனால், பீக் ஹவர் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், மின்சார நிலை கட்டண உயர்வுகளைத் திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றப்படவில்லை என்று கூறி தமிழ்நாடு முழுவதும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தங்களது கோரிக்கையை ஆவணம் செய்யக் கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம், தமிழ்நாடு தொழில் அமைப்பினர் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து, லகு உத்யோக் பாரதி மாநில தலைவர் சிவகுமார் கூறுகையில், "சிறு, குறு தொழில் மின் நுகர்வோர்களுக்கு Tariff 3A(1) மின் இணைப்பு அளிக்க வேண்டும். தாழ் வழுத்த மின் கட்டணங்களுக்கு 0-12 கிலோவாட் வரை ரூபாய் 20, 112-150 கிலோவாட் வரை ரூபாய் 350 பெற வேண்டும். உயர் மின்னழுத்த பயன்பாட்டாளர்களுக்கான அதிகபட்ச கட்டணம் தற்பொழுது ரூபாய் 562 வசூலிக்கப்படும் நிலையில் அதனை முந்தைய கட்டணமான ரூபாய் 350ஆகக் குறைக்கப்பட வேண்டும்.

தாழ் வழுத்த மின் பயனீட்டாளர்களுக்கு, பீக் அவர் கட்டணத்தை நீக்க வேண்டும். அதே சமயம், உயர் மின்னழுத்த பயனீட்டாளர்களுக்கு பீக் அவர் நேரம் நான்கு மணி நேரமாகவும், மின்கட்டணம் 20% ஆகவும் குறைக்கப்பட வேண்டும். வருடாந்திர மின் கட்டண அதிகரிப்பு 1% இருக்க வேண்டும், சோலார் நெட்வொர்க்கிங் கட்டணம் நீக்கப்பட வேண்டும் மற்றும் நெட் மீட்டர் முறையில் அதிகப்படியாக உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் மின்சாரத்தை உபயோகிக்கும் மின்சாரத்திலிருந்து கழிக்கப்பட வேண்டும்.

112-150 கிலோவாட் வரை உபயோகிக்கும் தொழிற்சாலைகள் தனியாரிடமிருந்து நேரடியாக மின்சாரம் வாங்கும் நடைமுறைக்கு அனுமதி அளிக்க வேண்டும்" ஆகிய 7 அம்ச கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு ஆவணம் செய்ய வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். கடந்த ஆண்டு, உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, முதலமைச்சர் தங்களின் கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: "ஜெயிலருக்கு பதில் சிறைக் காவலன்.. படத்திற்கு தமிழில் தலைப்பு வையுங்கள்" - இயக்குநர் ஆர்.வி‌.உதயகுமார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.