ETV Bharat / state

H Raja: நடிகர் விஜயின் செயலுக்கு ஹெச்.ராஜா திடீர் ஆதரவு!

author img

By

Published : Jun 18, 2023, 10:10 PM IST

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் சினிமாவில் இருப்பதனால் வெற்றி பெறலாம் என சொல்ல முடியாது, விஜயின் அரசியல் பிரவேசத்தை வரவேற்ப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் எச்.ராஜா கூறியுள்ளார்.

விஜய் சினிமாவில் இருப்பதால் வெற்றி பெறலாம் என கூற முடியாது- எச்.ராஜா

கோயம்புத்தூர்: கோவை ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் பாஜகவின் மூத்த உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் சட்டத்திற்கு உட்பட்ட ஆட்சி நடைபெறுகிறதா என்ற கேள்வி எழுவதாகவும் ஜனநாயக விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்தார். ஆட்சிக்கு வந்தால் செந்தில் பாலாஜியை ஜெயிலில் வைப்பேன் என தெரிவித்த ஸ்டாலின் தற்போது வருத்தப்படுகிறார். செந்தில் பாலாஜியும், அவரது தம்பியும் கரூரை கைக்குள் வைத்திருந்தனர் என சாடிய அவர் எமர்ஜென்சி காலத்தில் ஒன்றரை வருஷத்திற்கு கட்சி வேட்டி கட்டாதவர்கள் திமுகவினர் என தெரிவித்தார்.

மேலும், “பாஜகவைச் சீண்ட வேண்டாம், சீண்டினால் அதற்கான பலனாக தற்போது அனுபவித்துக் கொண்டிருப்பதை விட அதிகமாக அனுபவிக்க நேரிடும். அரசியலமைப்பு சட்ட 164 யின் படி ஆளுநர் தான் முதல்வரின் அறிவுறுத்தலின் படி அமைச்சர்களை நியமிப்பார். அதேபோல் ஆளுநர் நினைத்தால் அமைச்சரை நீக்கவும் சட்டம் உள்ளது”, எனவும் கூறினார்.

பாஜக சூர்யாவைக் கைது செய்ததற்குக் கண்டனம் தெரிவித்த அவர், "சூர்யா சொன்னதில் என்ன தவறு உள்ளது? அவர் சொன்ன சம்பவம் உண்மை தான். திருமாவளவன் தீய சக்தி. டிஜிபிக்கு சட்டப்படி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை, எஜமான் சொல்வதைக் கேட்கிறார். டி.ஜி.பி., செய்தது அராஜகமான செயல்", என்றார்.

மேலும் அவர், “திமுகவிற்கு அழிவு ஆரம்பம், சிறைக்குச் சென்றதில் செந்தில் பாலாஜி முதல் நபர், திமுகவில் ஊழல் செய்த அத்தனை பேரும் சிறைக்குப் போவீர்கள். இன்னும் எத்தனை நாட்கள் இந்த ஆட்சி ஓடும் என உறுதியளிக்க முடியாது, மோசமான சூழல் தமிழகத்தில் உள்ளது. இந்த மோசமான ஆட்சியை மக்கள் முடிவுக்குக் கொண்டு வருவது தமிழகத்திற்கு நல்லது.”, எனவும் தெரிவித்தார்.

டாஸ்மாக்கில் 10 ரூபாய் கூடுதலாக வாங்குவது தொடர்பாக ஊழல் நடைபெறுகிறது என நிரூபித்த ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்த அவர் “செந்தில் பாலாஜியைக் காண சபரீசன் ஏன் செல்ல வேண்டும்? அவருக்கு என்ன தொடர்பு? தங்களுடனான தொடர்பைச் சொல்லி விடுவாரோ என்ற பயத்தில் செந்தில் பாலாஜியை பார்பதற்கு இரவோடு இரவாக ஸ்டாலின், உதயநிதி, சபரீசன் ஓடுகிறார்கள். அரசியல் தொடர்பு இல்லாத சபரீசன் செந்தில் பாலாஜியை கான சென்றதற்கான விழக்கத்தை முதல்வர் ஸ்டாலின் கொடுக்க வேண்டும்?”,எனவும் தெரிவித்தார்.

“2018ல் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பகிரங்கமாக செந்தில் பாலாஜியை சிறைக்கு அனுப்புவோம் என ஸ்டாலின் சொன்ன சபதம் தற்போது நிறைவேற்றப்பட்டு உள்ளதால் வாயாலும், செயலாலும் அமைதியாக இருக்க வேண்டும், இல்லையென்றால் தக்க எதிர் விளைவுகள் வரும்” எனவும் தெரிவித்தார்.

விஜயின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு, “அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் சினிமாவில் இருப்பதனால் வெற்றி பெறலாம் என சொல்ல முடியாது, நடிப்பிற்கு சிவாஜியை போல் பிறந்து வர வேண்டும் ஆனால் அரசியலில் சிவாஜியால் வெற்றிப்பெற முடியவில்லை. டி.ராஜேந்திரன், பாக்கியராஜ் ஆகியோரால் வெற்றிப்பெற முடியவில்லை.ஆனால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் நீண்ட நாட்கள் அரசியலில் இருந்தவர்கள். விஜயின் அரசியல் பிரவேசத்தை வரவேற்கிறோம்”, எனவும் தெரிவித்தார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு அவர் விடுத்த வேண்டுகோளில், “சாமி சிதம்பரனார் மற்றும் கண்ணதாசன் எழுதிய வனவாசம் ஆகிய புத்தகங்களை மாணவர்களுக்கு முழுவதுமாக கட்டாயமாக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களை போதைப்பொருளாக, காசுக்கு விலைப்பேசி விற்ற கூட்டம் திராவிட இயக்கங்கள்”, என கூறினார்.

மேலும் அவர், “அமித்ஷா பேசியதை யாரும் முழுவதுமாக தெரிந்துக்கொண்டு பேச மறுக்கிறோம். நம் மன்னர்களான சோழர்களை பற்றி பேச மறுத்து அன்னியர்கலுக்கு மட்டும் இடம் கொடுக்கிறோம்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா..? - எடப்பாடி பழனிசாமி ரியாக்‌ஷன் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.