ETV Bharat / state

'சினிமாவில் திறமையானவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்' - நடிகை அமிர்தா ஐயர் - நகைக்கடை திறப்பு விழாவில் அமிர்த அய்யர்

தமிழ் சினிமாவில் வேறுபாடுகள் பார்ப்பதில்லை; திறமையான அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது என கோவையில் நடிகை அமிர்தா ஐயர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Etv Bharat நகை கடையை திறந்துவைத்த நடிகை அமிர்தா ஐய்யர்

author img

By

Published : Feb 5, 2023, 4:54 PM IST

நகை கடையை திறந்துவைத்த நடிகை அமிர்தா ஐய்யர்

கோயம்புத்தூர்: மருதமலை சாலையிலுள்ள பி.என். புதூரில் தனியார் நகைக்கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில், பிகில் பட பிரபல நடிகை அமிர்தா ஐயர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கடையைத் திறந்து வைத்து முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், 'தற்போது ஹனுமன் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறேன். தமிழ்ப் படத்தில் நடிப்பதற்காக கதைகள் கேட்டு வருகிறேன். தமிழ் சினிமாவில் நடிகைகளிடம் வேறுபாடு பார்ப்பதில்லை. திறமையுள்ள நடிகைகள் அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

கோவைக்கு நான் சிறுவயதிலிருந்து வந்து கொண்டிருக்கிறேன். கல்லூரி படிக்கும்போது பலமுறை கோவை வந்துள்ளேன். ஒவ்வொரு முறை வரும்போதும் புது அனுபவமாக உள்ளது. எனக்கு கோவை உணவு என்றால் மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு முறை வரும்போதும் கோவை உணவை ருசிப்பதில் ஆர்வமாக இருப்பேன். நேற்று வந்தபோது ஒரு இனிப்பு வகை சாப்பிட்டேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது' என்றார்.

இதையும் படிங்க: இயக்குனர் டிபி கஜேந்திரன் காலமானார்..! - கல்லூரி நண்பருக்கு முதலமைச்சர் அஞ்சலி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.