நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகள் தவிர, வேறு எதற்கும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் தாக்கம் அதிகமுள்ள இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அங்குள்ள பொதுமக்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இப்பணிகளில் தினமும் சுழற்சி முறையில் காவல்துறைனினர் ஈடுபட்டும் வருகின்றனர்.
இந்நிலையில், கோவையில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களான போத்தனூர், சுந்தராபுரம், சங்கம் வீதி போன்ற பகுதிகளில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி ஆட்டோவில் ஒலிபெருக்கிகள் மூலம் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். மேலும் காவல்துறையில் வஜ்ரா வாகனம் மூலம் கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது.
அதனையடுத்து ட்ரோன் கேமரா உதவியுடன், மற்ற மாவட்டங்களில் சிக்கியது போல் இளைஞர்கள் வெளியில் சென்று விளையாடுகிறார்களா என கண்காணிப்பு பணிகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: மது அருந்துவதற்காக ரசாயன திரவம் காய்ச்சிய மூவர் கைது!