ETV Bharat / state

பொள்ளாச்சியில் தென்னந்தோப்பை சூறையாடிய சுள்ளிகொம்பன் யானை -இழப்பீடு கேட்கும் விவசாயிகள் - தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்

பொள்ளாச்சியில் அருகே சுள்ளிகொம்பன் யானை தென்னை மரங்களை சூறையாடிய நிலையில், சேதமடைந்த தென்னை மரங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சியில் தென்னை தோப்பை சூறையாடியா சுள்ளிகொம்பன் யானை!

author img

By

Published : Mar 1, 2023, 8:26 PM IST

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றை காட்டு யானையான சுள்ளிகொம்பன், அப்பகுதியைச் சுற்றியுள்ள தோட்டங்களுக்குள் அவ்வப்போது புகுந்து வருகிறது. அதில் தென்னை, பலா, வாழை, புளியமரம் உள்ளிட்ட மரங்களை சூறையாடியும் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியும் வருகிறது.

இந்நிலையில் செல்லமுத்து, சிவகுமார், சந்தானம், ஜனார்த்தன பிரபு ஆகிய விவசாயிகளின் தென்னந்தோப்புகளில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக அங்கிருந்த மரங்களை சூறையாடி சேதப்படுத்தி உள்ளது. ஒற்றை யானையின் அட்டகாசம் தொடர்ந்து வருவதால் வனத்துறையினர் அதனை அடர்ந்த காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்; சேதம் அடைந்த தென்னைமரங்களுக்கு தமிழ்நாடு அரசு கூடுதலாக இழப்பீடுகள் தரவேண்டும் எனவும் அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சுள்ளிகொம்பன் யானை இரவு நேரங்களில் நடமாட்டம் அதிகளவில் உள்ளதால் தற்காலிகமாக மின் வேலியை வனத்துறையினர் மற்றும் விவசாயிகள் அமைத்துள்ளனா். இதுவரை சுள்ளிகொம்பன் 150க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:முதலமைச்சருக்கு பிறந்தநாள் பரிசாக ஒட்டகம் முதல் பேனா சின்னமாதிரி வரை வழங்கிய தொண்டர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.