கோயம்புத்தூர், சிங்காநல்லூர் உழவர் சந்தை எதிர்புறம் உள்ள ஒரு மருந்து குடோனில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக சிங்காநல்லூர் காவல் துறையினர், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத் துறையினர் போராடி, தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
மேலும் இந்தத் தீ விபத்தானது மின் கசிவினால் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. திடீரென ஏற்பட்ட இந்த விபத்தில், கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துப் பொருள்கள், மின்னணு சாதனங்கள் நாசமாகின. இது குறித்து சிங்காநல்லூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தினால் அப்பகுதியில் அச்சம் நிலவியது.
இதையும் படிங்க: திடீரென வெடித்த செல்போன் பேட்டரி: பதறவைக்கும் சிசிடிவி காட்சி!