கோயம்புத்தூர் ஆர்.எஸ். புரத்தை அடுத்துள்ள புரூக் பீல்டு சாலைக்கு அடியில் செல்லும் மிகப்பெரிய கழிவுநீர் குழாய் உடைந்ததால் கழிவு நீரானது சாலையை அரித்து, திடீரென பெரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டது.
நான்கு அடி ஆழத்திற்குப் பள்ளம் ஏற்பட்டதையடுத்து போக்குவரத்துக் காவலர்கள் உடனடியாக அங்கு வந்து பள்ளத்தைச் சுற்றி டிவைடர் வைத்து, வாகனங்கள் பள்ளத்தைச் சுற்றிச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.

சாலையில் ஏற்பட்ட இந்தப் பள்ளம் உடனடியாகச் சரிசெய்யப்படும் எனக் காவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:2 மாதங்களுக்கு பின் போக்குவரத்து நெரிசலை சந்திக்கும் சென்னை!