ETV Bharat / state

'மாணவிகளுக்கு எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகள் அமையும்' - எம்.பி., சண்முகசுந்தரம் - Students will have job opportunities in the future says MP Shanmugasundaram

பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மாணவிகளுக்கு எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகள் அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

பயிற்சி முகாம்
பயிற்சி முகாம்
author img

By

Published : Jun 29, 2022, 7:14 PM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சியில் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை விரைவில் தொடங்க உள்ளது. இதில் பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை, உடுமலை படித்த கல்லூரி மாணவிகள், படித்த குடும்பப் பெண்கள் பணியில் அமர்த்தபட உள்ளனர்.

இதையடுத்து பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள நாச்சிமுத்து காலேஜில் பயிற்சி முகாமை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.

மாணவிகள் மத்தியில் பேசுகையில், முதலமைச்சரிடம் பொள்ளாச்சி பகுதியில் மாணவிகள் மற்றும் குடும்பப் பெண்களுக்கு எதிர்காலம் கருதி தனியார் தொழிற்சாலை பொள்ளாச்சி பகுதிக்கு வர வேண்டும் என கோரிக்கை வைத்தேன். முதலமைச்சர் அதற்குண்டான நடவடிக்கைகளை விரைந்து எடுத்து ஒரு மாதத்தில் பொள்ளாச்சி பகுதிக்கு தொழிற்சாலை தொடங்க அனுமதி அளித்துள்ளார்.

பயிற்சி முகாம்

முதலமைச்சரின் இல்லம் தேடிக் கல்வி அடுத்து இல்லம் தேடி வேலை என பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த பயிற்சி முகாம் அமைந்துள்ளது. இதில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரயில் மூலம் அழைத்து செல்லப்பட்டு டெல்லியில் 3 மாதம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

உணவு மற்றும் தங்குவதற்கு இலவசம். இதில் ஊக்கத்தொகையாக ரூபாய் 6000 வழங்கப்படும் என்றார்.

பின் செய்தியாளரிடம் கூறும் பொழுது, டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு இருக்கும் தனியார் தொழிற்சாலை நிறுவனம் செல்போன், கேமரா, லேப்டாப், கம்ப்யூட்டர் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்க உள்ளனர். ஆறு மாத காலத்தில் தொடங்க உள்ளது. இந்த நிறுவனத்தில் உயர் தொழில்நுட்பம் வாய்ந்த எலக்ட்ரிக் பொருட்கள் தயாரிக்கப்பட உள்ளது.

இந்த தொழிற்சாலைக்கு 5000 பேர் பயன்பெறும் வகையில் வேலை வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. இதில் படித்த மாணவிகள், படித்த குடும்பப் பெண்கள் பணியில் சேர்வதற்கு உண்டான பயிற்சி முகாம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக உடுமலை மற்றும் ஆனைமலையில் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். நாளை உடுமலை, மடத்துக்குளம், வரும் திங்கட்கிழமை வால்பாறையிலும் பயிற்சி முகாம் தொடங்க உள்ளது. இந்த வேலை வாய்ப்பு எதிர்காலத்தில் மாணவிகளுக்கு நல்லதொரு வேலை வாய்ப்பு அமைய உள்ளது என்றார்.

இதில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ், நகராட்சி மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள், குடும்பப் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: நதிகளை நாம் தெய்வமாக வணங்க வேண்டும் - ஆளுநர் ஆர்.என். ரவி

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.