ETV Bharat / state

' குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்ப பெறவேண்டும்...' - மத்திய அரசை எச்சரித்த மாணவர்கள் ! - citizenship amendment bill

கோவை: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு‌த் தெரிவித்து, அகில இந்திய மாணவர்கள் சங்கத்தினர் கல்லூரி வாயில் முன் போராட்டம் நடத்தினர்.

Students' Federation of India
Students' Federation of India
author img

By

Published : Dec 11, 2019, 8:45 PM IST

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த அகில இந்திய மாணவர்கள் சங்க மாணவர்கள் கல்லூரி வாயில் முன் போராட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தின்போது 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் ' இஸ்லாமிய மக்களுக்கு எதிரான சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறு' என்ற பதாகையை ஏந்தியவாறு, மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு‌த் தெரிவித்து மாணவர்கள் போராட்டம்

பின் செய்தியாளர்களிடம் பேசிய அனைத்திந்திய மாணவர்கள் சங்க மாவட்டச் செயலாளர் தினேஷ், ' 1955ஆம் ஆண்டு மத அடிப்படையில் மக்களை பிரிக்கக் கூடாது என குடியுரிமை சட்டம் உள்ளது. ஆனால், மத்திய அரசு தற்போது கொண்டு வந்த திருத்தச் சட்டத்தில் மத ரீதியில் மக்களைப் பிரிக்கலாம் என்றும் உள்ளது. இந்த மசோதாவில் இலங்கைத் தமிழர் பிரச்னைகளைப் பற்றி குறிப்பிடவில்லை. மதச்சார்பின்மை உள்ள இந்தியாவில் இது போன்ற சட்டம் மிக தவறான ஒன்று. இதனால் பல பிரச்னைகள் உருவாக வாய்ப்புள்ளது. இந்த குடியுரிமை சட்டத்திருத்தத்தை உடனடியாக திரும்ப பெறவேண்டும். இல்லையனில் மாணவர்கள் போராட்டம் தொடரும்' என்றார்.

இதையும் படிங்க : அமித் ஷா படத்தை எரித்த மாணவர்கள்: அத்துமீறி நுழைந்த பாஜகவினர்... துரத்திப் பிடித்த காவல் துறை...!

Intro:சட்ட திருத்த மசோதாவை கண்டித்து கோவை அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் போராட்டம்.

Body:சட்ட திருத்த மசோதாவில் அண்டை மாநிலத்தில் இருந்து குடிபெயரும் முஸ்லீம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டாது என்பதை கண்டித்து கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியை சேர்ந்த அகில இந்திய மாணவர்கள் சங்க மாணவர்கள் கல்லூரி வாசல் முன்பு போராட்டம் நடத்தினர்.

கல்லூரி வாசல் முன்பு திரண்ட 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். மேலும் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறு என்ற பதாகையை ஏந்தியவாறு முழக்கமிட்டனர்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அனைத்திந்திய மாணவர்கள் சங்க கோவை மாவட்ட செயலாளர் தினேஷ் 1955ம் ஆண்டு இந்திய அரசு கொண்டு வந்த சட்டம் யாரையும் பிரித்து பார்க்க கூடாது என்று உள்ளது என்றும் தற்போது உள்ள அரசு கொண்டு வந்த திருத்த சட்டம் இஸ்லாமியர்களை பிரிக்கும் நோக்கில் உள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் இந்த மசோதாவில் இலங்கை தமிழர் பிரச்சினைகளை குறிப்பிடவில்லை என்று கூறினார். இது மிக பெரிய பிரச்சனைகளை கொண்டுவரும் என்றும் கூறினார். மேலும் இந்தியா என்பது மதசார்பின்மை நாடு என்றும் ஆனால் இது போன்ற சட்டத்தால் அது இல்லாமல் போகிறது என்று கூறினார்.

இதற்கு போலீஸார் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினார்.

Conclusion:இதை கண்டித்து தற்போது போராட்டம் நடத்தியுள்ளோம் என்றும் இதை வாபஸ் வாங்கவில்லை எனில் போராட்டம் தொடரும் என்றும் தெரியாமல்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.