கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆழியார் அணை சுற்றுலா தலங்களில் மிகவும் பிரபலமானது. இங்கு தமிழ்நாடு மட்டுமல்லாது, பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வந்துசெல்கின்றனர். அப்படி வரும் சுற்றுலாப் பயணிகள் அணையின் பின் பகுதிக்கு அத்துமீறி சென்று மது அருந்திவிட்டு பாட்டில்களை அணையில் வீசி செல்கின்றனர்.
இதனால் அணையில் அசுத்தம் ஏற்பட்டு அணைக்கு நீர் அருந்த வரும் விலங்குகளுக்கு ஆபத்தாக அமைகிறது. அதேபோல் பூங்காவின் சாலையோரம் சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் சாப்பாடு தட்டு, மதுபாட்டில்களை போட்டுச் செல்வதால், கழிவுபோல தேங்கி தூர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த கழிவுகள் மூலம் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:'பரம்பிக்குளம் ஆழியாறு திட்டங்கள் விரைவில் முடிக்கப்படும்' - துணை சபாநாயகர் ஜெயராமன்!