ETV Bharat / state

‘குடிநீர் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடக்காததே காரணம்’ - ஸ்டாலின்

கோவை: குடிநீர் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடக்காததே காரணம் என சூலூர் இடைத்தேர்தல் பரப்புரையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மு.க.ஸ்டாலின்
author img

By

Published : May 16, 2019, 2:26 PM IST

கோவை மாவட்டம் சூலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட அப்பநாயக்கன்பட்டி பகுதியில் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமிக்கு ஆதரவாக, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். மேலும், அப்பகுதிகளில் உள்ள பிரச்னைகள் குறித்தும் ஸ்டாலின் கேட்டறிந்தார். அப்போது, ஏராளமான பொதுமக்கள் ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

இதனையடுத்து, கிராம மக்களிடம் திண்ணை பரப்புரையை மேற்கொண்ட ஸ்டாலினிடம் குடிநீர், வேலை வாய்ப்பு உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதைதொடர்ந்து பொதுமக்களிடம் பேசிய ஸ்டாலின், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் இருப்பதே காரணம் எனவும், திமுக ஆட்சிக்கு வந்தால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை

மேலும், திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் ரத்து செய்யப்படும், கேஸ் விலை குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்த அவர், அதிமுக ஆட்சி எந்த மக்கள் பிரச்னைகளை குறித்தும் கண்டுகொள்ளாமல் தங்களை காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே கவனமாக உள்ளதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

சு.சீனிவாசன்.     கோவை

அதிமுக அரசிற்கு மக்களை பற்றி கவலையில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அப்பநாயக்கன்பட்டி பகுதியில் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமிக்கு ஆதரவாக, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். மேலும் அப்பகுதிகளில் உள்ள பிரச்சணைகள் குறித்தும் ஸ்டாலின் கேட்டறிந்தார். அப்போது ஏராளமான பொதுமக்கள் ஸ்டாலினுடன் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டனர். கிராம மக்களிடம் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்ட ஸ்டாலின், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதையடுத்து செலக்கரச்சல் கிராமத்திலும் ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது குடிநீர், வேலை வாய்ப்பு உள்ளிட்ட பிரச்சணைகள் தொடர்பாக பொதுமக்கள் ஸ்டாலினிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். பொதுமக்கள் கொடுத்த தேநீரை ஸ்டாலின் அருந்தினார்.
இதைதொடர்ந்து பொதுமக்களிடம் பேசிய ஸ்டாலின், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்சணைகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடக்காததே காரணம் எனவும், திமுக ஆட்சிக்கு வந்தால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுமெனவும் தெரிவித்தார். மேலும் திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் இரத்து செய்யப்படும், கேஸ் விலை குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். சென்னை உட்பட தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்சணை உள்ளது எனவும்,  அதிமுக ஆட்சி எந்த பிரச்சணைகளை பற்றியும் கவனிக்காமல் தங்களை காப்பாற்றி கொள்ளவதில் மட்டும் கவனமாக உள்ளதாகவும் கூறிய அவர், அதிமுக அரசு மக்களை பற்றி கவலையில்லாமல் இருப்பதாக குற்றம்சாட்டினார். பிரதமர் மோடி அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை எனவும், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் தலையீடு உள்ளது எனவும் அவர் கூறினார். ஜெயலலிதா மர்ம மரணம், கொடநாடு கொலை, கொள்ளை, பொள்ளாச்சி பாலியல் வழக்கு ஆகியவை குறித்து திமுக ஆட்சிக்கு வந்தால் விசாரணை நடத்தப்படும் எனவும், அதிமுக ஆட்சியை அகற்ற திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Video in ftp
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.