ETV Bharat / state

‘டிடிவி தினகரனுக்கு ஆதரவாக ஸ்டாலின்’ - அதிமுக கோவை செல்வராஜ்! - செல்வராஜ்

கோவை: டிடிவி தினகரனுக்கு ஆதரவாக ஸ்டாலின் செயல்படுவதாக அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

கோவை செல்வராஜ்
author img

By

Published : May 1, 2019, 3:15 PM IST

கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிமுக ஆட்சியை ஸ்டாலினும், டி.டி.வி தினகரனும் அகற்ற முயற்சித்து வருகின்றனர். அவர்கள் இருவருக்கும் இடையே ரகசிய உறவு உள்ளது. இருவரும் மறைமுகமாக சந்தித்து பேசிவருகிறார்கள். இதற்கு ஸ்டாலின் மருமகன் ஏஜென்டாக செயல்பட்டு வருகிறார்" என்றார்.

மேலும், அதிமுகவிற்கு எதிராக மூன்று எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்ய நோட்டீஸ் அனுப்பினால் திமுக ஏன் பதட்டம் அடைகிறது என கேள்வி எழுப்பிய அவர், தினகரனுக்கு ஆதரவாக ஸ்டாலின் செயல்படுவதாகவும், செந்தில் பாலாஜியை தினகரன் தான் திமுகவுக்கு அனுப்பி வைத்தார் என்றும் தெரிவித்தார்.

கோவை செல்வராஜ் பேட்டி

தொடர்ந்து பேசிய அவர், "22 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் எனவும் அமமுக ஒரு கம்பெனி எனவும் தேர்தல் காரணத்தினால் தான் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைத்துள்ளோம். அதிமுக ஆட்சிக்கு எதிராக செயல்பட்டால் தமீமுன் அன்சாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும். சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடையும் எனவும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது 30 திமுக எம்எல்ஏக்கள் அதிமுக ஆட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள்" எனவும் கூறினார்.

Intro:திமுக தலைவர் ஸ்டாலின் அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாக அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்

Body:கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது பேசிய அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிமுக ஆட்சியை திமுக தலைவர் ஸ்டாலினும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி டி வி தினகரன் அகற்ற முயற்சித்து வருவதாக தெரிவித்தார் மேலும் ஸ்டாலினுக்கும் தினகரனுக்கும் இடையே ரகசிய உறவு உள்ளதாகவும் இருவரும் மறைமுகமாக சந்தித்து பேசிவருகிறார்கள் எனக் கூறி அவர் இதற்கு ஸ்டாலின் மருமகன் ஏஜென்டாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார் அதிமுகவிற்கு எதிராக மூன்று எம்எல்ஏக்கள் பதவி நீக்கம் செய்ய நோட்டீஸ் அனுப்பினார் திமுக ஏன் பதட்டம் அடை கிறது என கேள்வி எழுப்பிய அவர் தினகரனுக்கு ஆதரவாக ஸ்டாலின் செயல்படுகிறார் என தெரிவித்தார் செந்தில் பாலாஜியை தினகரன் தான் திமுகவுக்கு அனுப்பி வைத்தார் 22 தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் எனவும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு கம்பெனி எனவும் தேர்தல் காரணத்தினால் தான் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைத்து உள்ளோம் எனவும் அவர் கூறினார் நோட்டீஸ் அனுப்பப்பட்ட மூன்று எம்எல்ஏக்களும் அம்மா முன்னேற்றக் கழக உறுப்பினர் ஆகிய மாவட்ட செயலாளராக உள்ளனர் எனவும் அதிமுக ஆட்சிக்கு எதிராக செயல்பட்டால் தமிழ் முன் அன்சாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடையும் எனவும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் போது 30 திமுக எம்எல்ஏக்கள் அதிமுக ஆட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பவர்கள் எனவும் அவர் தெரிவித்தார் சூலூர் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் வேலுசாமி அதிமுகவில் தான் இருக்கிறார் எனவும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக தேர்தல் ரத்து செய்ய காரணமாக இருந்த துரைமுருகன் மீது ஸ்டாலின் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.