ETV Bharat / state

கோவை மாநகராட்சியில் 305 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் - கரோனா வைரஸ் தொற்றுப் பரவல்

தமிழ்நாடு முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வரும் நிலையில், கோவை மாநகராட்சி சார்பில் 305 சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கோவையில் மாபெரும் தடுப்பூசி முகாம்
கோவையில் மாபெரும் தடுப்பூசி முகாம்
author img

By

Published : Sep 12, 2021, 1:25 PM IST

கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் எண்ணிக்கையில் பிற மாவட்டங்களை விட கோவை மாவட்டம் முதலிடத்தில் இருந்து வருகிறது.

இதனிடையே தமிழ்நாடு முழுவதும் இன்று (செப்.12) மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வரும் நிலையில், கோவை மாநகராட்சி சார்பில் 305 சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கோவையில் மாபெரும் தடுப்பூசி முகாம்
கோவையில் நடைபெறும் மாபெரும் தடுப்பூசி முகாம்

அதன்படி, 263 நிரந்தர முகாம்கள், 25 நடமாடும் முகாம்கள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் ஏழு, வ.உ.சி மைதானத்தில் 10 முகாம்கள் என ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலை 7 மணிக்குத் தொடங்கும் இந்த முகமானது மாலை 7 மணி வரை செயல்படும். இந்த முகாம்களில் கோவிஷீல்டு, கோவாக்சின் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.

கோவையில் மாபெரும் தடுப்பூசி முகாம்
தடுப்பூசி செலுத்துக் கொள்ள வருகை தரும் மக்கள்

முகாம்களுக்கு செல்ல இயலாத முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களது இருப்பிடத்திலேயே சென்று தடுப்பூசி செலுத்துவதற்காக நடமாடும் முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த முகாம்கள் தொடர்பான கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களும் (0422-2302323, 9750554321) தெரிவிக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசி போடப்படும் அனைத்து மையங்களிலும் குடிநீர், சானிடைசர் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. முகாமுக்கு வரும் அனைவரும் சமூக இடைவெளியைப் பின்பற்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் இரண்டாவது தவணை செலுத்த வரும் அனைத்து மக்களும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றுகளை வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

கோவையில் மாபெரும் தடுப்பூசி முகாம்
கோவையில் மாபெரும் தடுப்பூசி முகாம்

அனைத்து மையங்களிலும் பாதுகாப்புக்காக காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆங்காங்கே ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. தடுப்பூசி மையங்களில் உளவியல் ஆலோசனையும் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க: ’100% தடுப்பூசி செலுத்திய கிராமங்கள் ஆயிரத்தை தாண்டும்’ - மா.சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.