ETV Bharat / state

பாம்புக் கடியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள என்ன வழி?

பாம்பிடம் கடிபட்டவர்களை அப்படியே படுக்க வைத்து உடல் அசையாமல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். பாம்பு கடிபட்டவர் பதற்றமடையகூடாது. அவர் பதற்றமடையும்போதும் ரத்த ஓட்டம் அதிகரித்தாலும் விஷம் பரவிவிடும்.

பாம்புகள்
பாம்புகள்
author img

By

Published : Jul 1, 2021, 7:43 AM IST

Updated : Jul 1, 2021, 8:23 AM IST

“பாம்பு என்றால் படையே நடங்கும்” என்பார்கள், அப்படிப்பட்ட பாம்பைப் பார்த்தால் பயப்படாதவர்கள் ஒரு சிலரே. மேலும், பாம்பு குறித்த பல தவறான நம்பிக்கைகள் மக்களிடம் உள்ளன. பாம்பு கடித்தால் உடனே இறந்து விடுவார்கள் எனக் கருதி அவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பாம்பு கடித்த இடத்தில் கத்தியால் கீறுவது, கடித்த இடத்தில் வாய் வைத்து ரத்தத்தை உறிஞ்சுவது என அவரவருக்குத் தெரிந்தவற்றை கூறுவார்கள்.

இதன் மூலம் பாம்பிடம் கடிபட்டவரும், உதவி செய்பவருமேகூட உயிரிழக்கும் அபாயமுள்ளது. இதனை செய்யாமல் பாம்புக்கடிக்கு ஆளானவரை உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். முடிந்தவரை காலதாமதத்தைத் தவிர்க்க வேண்டும். தற்போது அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்பு கடிக்கான விஷ முறிவு மருந்துகள் உள்ளதால், அங்கு முதலுதவி பெற்று, பின் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம்.

பாம்புக் கடியால் பாதிக்கப்படும் பெரும்பாலானோர் வயல் வேலையில் ஈடுபடுவோர், புதர் நிறைந்த பகுதியில் குடியிருப்பவர்கள் தான். இதுகுறித்து பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த சிறப்புத் தொகுப்பில் காணலாம்.

இரண்டு வகை பாம்புகள்

பாம்பு பிடிக்கும் தன்னார்வலர் சந்தோஷ் இது குறித்து கூறுகையில், “பெரும்பாலானோரை நாகபாம்பு, கட்டுவிரியன் பாம்புகள் கடித்து விடுகின்றன. நாகபாம்பு கடித்தால் அதன் விஷம் வேகமாக பரவக்கூடும். அந்த விஷம் நரம்பு மண்டலத்தை தாக்கி, சுவாச செயல்பாடுகளை நிறுத்திவிடும். எனவே, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் ஏற்படும் தாமதம் இறப்புக்கான வாய்ப்பை அதிகப்படுத்தும்.

கோயம்புத்தூரை பொறுத்தவரை விஷமுள்ள பாம்புகள், விஷமற்ற பாம்புகள் என இரண்டு வகை பாம்புகள் கடித்து அழைத்து வரப்படுபவர்கள் சரிபாதியாக உள்ளனர். விஷமில்லாத பாம்பு கடித்தால் கடித்த இடத்தில் இரண்டு புள்ளிகள் தெரியும். ரத்தம் உறைவு தன்மை இயல்பாக இருக்கும்.

பாம்பு பிடிக்கும் தன்னார்வலர் சந்தோஷ்

விஷமுள்ள பாம்பு கடித்தால், கடித்த இடத்தில் ரத்தம் வெளியேறும், ரத்தம் உறையும் தன்மை குறைந்துவிடும். சில நேரங்களில் அதிக ரத்த உறையும் தன்மை ஏற்பட்டு, இதயம், மூளை, சிறுநீரகத்துக்கு செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும்” எனத் தெரிவித்தார்.

பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையர் மருத்துவர் நிர்மலா கூறுகையில், “பாம்பு கடித்த இடத்தில் சோப்பு, டெட்டால் போட்டு கழுவி விடலாம். பாம்பு கடித்த இடத்துக்கு மேல் கட்டு போடுவதால் பெரிய பலன் இருக்காது. ஏனெனில், உடலின் உள்ளே இருக்கும் ரத்தக்குழாயில் ரத்தம் ஓடிக்கொண்டுதான் இருக்கும். பாம்பு கடித்தவரை நடக்கவோ, ஓடவோ விடக்கூடாது. அவரை அப்படியே படுக்கவைத்து உடல் அசையாமல் மருத்துவமனைக்கு அழைத்துவர வேண்டும்.

அதேசமயம் உடலில் அசைவு இருந்து, ரத்த ஓட்டம் அதிகரித்தால், விஷம் உடல் முழுக்க வேகமாகப் பரவிவிடும். பாம்பு கடிபட்டவர் பதற்றமடையகூடாது. அவர் பதற்றமடையும்போதும் ரத்த ஓட்டம் அதிகரித்தாலும் விஷம் பரவிவிடும். இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவருக்கு தைரியமூட்ட வேண்டும். எந்த அளவிற்கு அவரின் இதயத்துடிப்பை கட்டுப்படுத்துகிறோமோ, அந்த அளவுக்கு அவரை நாம் காப்பாற்றலாம்.

எந்தப் பாம்பு கடித்தது என்பது தெரிந்தால் அதற்கேற்ற சிகிச்சை விரைந்து கொடுக்க முடியும். கடந்த ஆறு மாதங்களில் பாம்பு கடித்த 67 பேருக்கு கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் 24 மணி நேரமும் பாம்பு கடித்தவர்களுக்கு வைத்தியம் பார்க்கப்படுகிறது. முடிந்தவரை பாம்பு கடியால் சிக்கியவரை விரைவில் மருத்துவமனைக்கு அழைத்து வந்தால் அவரை பிழைக்க வைத்து விடலாம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பட்ஜெட் கூட்டத்தொடரில் அண்ணா பெயரில் திட்டங்கள்’ - முதலமைச்சர் ஸ்டாலின்

Last Updated : Jul 1, 2021, 8:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.