கோயம்புத்தூர்: உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று (ஜூலை 21) பக்ரீத் திருநாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஈகை திருநாள் என்றழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களின் முக்கிய திருநாளாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இன்று ஒப்பணக்கார வீதி அத்தார் ஜமாத் பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தினர்.
கரோனாவிலிருந்து மீள பிரார்த்தனை
கரோனாவிலிருந்து உலகம் மீள பிரார்த்தனை மேற்கொண்டனர். பின்னர், அவர்கள் ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர். கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி இந்தச் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இதையும் படிங்க: பக்ரீத் பண்டிகை - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து