ETV Bharat / state

பிரிவினைவாத அரசியலைத் தவிர்த்தால் சமூகப் பிரச்னையை சரி செய்யலாம் - ஆளுநர் ஆர்.என்.ரவி - சமூக பிரச்னைகளை சரி செய்ய முடியும்

பிரிவினைவாத அரசியலைத் தவிர்த்தால் தான், சமூகப் பிரச்னைகளை சரி செய்ய முடியும் என, ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

Governor function
ஆளுநர் நிகழ்ச்சி
author img

By

Published : Apr 5, 2023, 6:12 PM IST

கோவை: கே.ஜி. பவுண்டேஷன் அமைப்பின் சார்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கும் விழா சரவணம்பட்டியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல் (KGISL) வளாகத்தில் இன்று (ஏப்ரல் 5) நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்திரனராக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். 'Dynamic Indian of Millenium', 'Personality of the Decade' என இரண்டு விதமான விருதுகள் பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்த 11 பேருக்கு வழங்கப்பட்டது.

விழாவில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "மருத்துவம், கல்வி, ஆன்மிகம் எனப் பல்வேறு துறைகளில் கே.ஜி. நிறுவனம் சிறந்த சேவையாற்றி வருகிறது. ஸ்ரீ ராமர் குறித்து எழுத வேண்டும் என கம்பர் எண்ணியது போல, இந்த சமூகத்திற்கு உன்னதமான சேவையை வழங்க வேண்டும் என இந்நிறுவனத்தின் நிறுவனர் எண்ணியுள்ளார். கடந்த காலங்களில் நமது நாட்டு மக்களுக்கு மருத்துவம், கல்வி ஆகியவை கிடைக்காத சூழல் இருந்து வந்தது. அடிப்படை தேவைகள் கிடைக்காமல் வறுமை நிலவி வந்தது. இதனைப் பூர்த்தி செய்ய பல்வேறு மருத்துவ கட்டமைப்புகள் அமைக்கப்பட்டபோதும் சில மக்களுக்கு மருத்துவ சேவை கிடைக்கவில்லை. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த பின்பும் ஆங்கிலேயர்களின் எண்ணத்தைப் போன்றே நமது நாட்டை மொழியாலும், இன ரீதியாகவும் பிரிக்கும்வகையில் கண்ணோட்டம் நிலவி வந்ததே இதற்குக் காரணம்.

இந்த நிலையில் இந்தியாவை ஒரே நாடாக கருதி பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் அமல்படுத்தப்பட்ட பின்பு, இந்த நிலைமை மாறியுள்ளது. மருத்துவம், கல்வி, குடிநீர், எரிவாயு, வீடு ஆகியவை அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் டிஜிட்டல் புரட்சி நடைபெற்று வருகிறது. உலகின் மிகச்சிறந்த டிஜிட்டல் சேவைகள் உள்ள நாடாக இந்தியா உள்ளது. இன்று இணையதள பயன்பாடு அனைவருக்கும் சென்றுள்ளது.

தனி மனிதரின் இணையதள பயன்பாட்டு அளவு அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம் அனைத்து பகுதிகளுக்கும் தொழில்நுட்பங்களைக் கொண்டு சென்றதும், அவற்றின் விலையைக் குறைத்ததும் தான். உலகப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் நாடாக இந்தியாவை உலக நாடுகள் எதிர்நோக்கி உள்ளன.

இந்திய நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதமாக மகளிர் சக்தி உள்ளது. மகளிர் சுகாதாரம், அவர்களுக்கான கல்வி ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. சமூக நீதிக்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதும், மக்கள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் மலம் கலப்பது உள்ளிட்டப் பல்வேறு சமூக நீதி சார்ந்த பிரச்னைகளையும் காண முடிகிறது.

ஏழை எளிய அடித்தட்டு மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பிரிவினைவாத அரசியலைத் தவிர்த்தால் தான் சமூகப் பிரச்னைகளை சரி செய்ய முடியும். அதற்கு நாம் அனைவரும் ஒரே குடும்பம் என கருத வேண்டும். அந்த வகையில் தான் மருத்துவக் காப்பீடு திட்டமாக 5 லட்சம் ரூபாய் வழங்கும் ஆயுஷ்மான் மருத்துவக் காப்பீடு திட்டம் ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. 18ஆம் நூற்றாண்டு வரை இந்தியா உலக அளவில் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருந்துள்ளது. அதற்குப் பிறகான பிரிவினைவாத அரசியலால் தான், நமது நாடு பின்தங்கி இருந்தது. மொழி, நிலம், இனம் ஆகியவற்றைத் தாண்டி நாம் அனைவரும் ஒரே குடும்பம் என கருத வேண்டும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா முழுமையாக வளர்ச்சி அடைந்த நாடாகத் திகழும். இது மக்களின் பங்களிப்பால் தான் சாத்தியமாகும். தொழில்நுட்பம், ஸ்டார்ட் அப் எனப் பல்வேறு துறைகளில் இந்தியா தலைமைத்துவத்தில் உள்ளது. இதில் நமது நாட்டின் இளைஞர்களின் பங்கு முக்கியமாக உள்ளது. நமது நாட்டின் 100ஆவது சுதந்திரத்தைக் கொண்டாடும் சூழலில் இந்தியா உலக நாடுகளுக்குத் தலைமையாகத் திகழும்" என்றார்.

ஏ.சி இயந்திரத்தில் பழுது: முன்னதாக, ஆளுநர் ரவி மேடைக்கு வந்தவுடன், தேசியகீதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்கள் பாடப்பட்டன. அப்போது அரங்கில் வைக்கப்பட்டு இருந்த பிரமாண்ட ஏ.சி இயந்திரத்தில் இருந்து அதிக சத்தத்துடன் கேஸ் வெளியேறியது. அங்கிருந்த மாணவிகள் அச்சமடைந்து வேறு இடத்திற்கு நகர்ந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பிரமாண்ட ஏ.சி இயந்திரம் நிறுத்தப்பட்டு நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது.

இதையும் படிங்க: தமிழ்நாடு, புதுச்சேரியில் 2 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.