கோயம்புத்தூரில் கடந்த நான்கு நாட்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மத்தவராயபுரம் பகுதிகளில் பயிரிட்ட வாழை மரங்கள் கீழே சாய்ந்தன. அதன்தொடர்ச்சியாக சிறுவாணி சாலை நரசிபுரம் பகுதியில் 1000 ஏக்கருக்கும் மேல் பயிரிடப்பட்டுள்ள சின்ன வெங்காயம் முழுவதும் மழையில் மூழ்கி, அழுகும் நிலைக்கு வந்துவிட்டது. இந்த சின்ன வெங்காயம் எல்லாம் கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள மாவட்டங்களான ஈரோடு, நாமக்கல் போன்ற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படயிருந்தது.
ஆனால், தற்போது இ-பாஸ் நடைமுறை இருப்பதால், அங்கிருந்து வந்து எடுத்துச் செல்லும் நபர்கள் தாமதமாக தான் வருகின்றனர். ஏற்கெனவே இந்த சின்ன வெங்காயங்கள் அழுகும் நிலையில் இருப்பதால், இ-பாஸ் உடனடியாக வழங்க நடவடிக்கைகள் எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையெனில் சின்ன வெங்காயம் முழுவதும் அழுகி நாசமாகிவிடும் என்று தெரிவித்துள்ளனர்.