ETV Bharat / state

அடுக்குமாடி குடியிருப்பில் தீ பிடித்து எரிந்த வாகனங்கள்... - ஷீலா அப்பார்ட்மெண்ட்

கோவையில் அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் அதிகாலையில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை அப்பார்ட்மெண்டில் நிறுத்தியிருந்த ஆறு வாகனங்கள் தீ பிடித்து எரிந்தது

author img

By

Published : Nov 22, 2022, 1:09 PM IST

கோவை: சரவணம்பட்டி விளாங்குறிச்சியில் ஷீலா அப்பார்ட்மெண்ட் என்ற கட்டடத்தின் போர்டிகோவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 இரு சக்கர வாகனங்கள் இன்று அதிகாலை 4 மணி அளவில் அடுத்தடுத்து தீ பிடித்து எரிந்துள்ளது.

இதுகுறித்து அங்குள்ளவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இது தீ விபத்தா? அல்லது தீ வைத்து எரிக்கப்பட்டதா..? என்பது குறித்து கோவில்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு தடயவியல் துறையினரும் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் இருசக்கர வாகனத்தின் பேட்டரியில் இருந்து ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு பக்கத்தில் இருந்த வாகனங்களுக்கு பரவி இருக்கலாம் என்பது தெரிய வந்ததுள்ளது.

இதையும் படிங்க: திருமணமான 10வது நாளில் காதலனுடன் சென்ற மணப்பெண்; காதலன் வீட்டை சூறையாடிய பெண் வீட்டார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.