ETV Bharat / state

கோவையில் 'சிறுவாணி இலக்கிய திருவிழா' நாளை தொடங்குகிறது! - ilakkiya thiruvizha in coimbatore

கோவையில் இந்த ஆண்டுக்கான இலக்கிய திருவிழா ‘சிறுவாணி இலக்கிய திருவிழா’ என்ற தலைப்பில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு நாட்கள் நடைபெற உள்ளது.

கோவையில் 'சிறுவாணி இலக்கிய திருவிழா' நாளை தொடங்குகிறது!

author img

By

Published : Feb 24, 2023, 10:26 AM IST

கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் கூட்டத்தொடரில், தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுக்கு நான்கு இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும் என மாநில நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.

இந்த அறிக்கையின் படி, கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான இலக்கிய திருவிழா ‘சிறுவாணி இலக்கியத் திருவிழா’ என்னும் தலைப்பில் நாளை (பிப்.25) மற்றும் நாளை மறுநாள் (பிப்.26) ஆகிய இரு நாட்களில் நடைபெறுவதாக கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கோவைமாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த இலக்கிய திருவிழா பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளார்கள்.

இதன் தொடக்க விழாவில் திரைப்பட நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார். இரண்டு அரங்குகளில் 40 பேச்சாளர்கள், 30 தலைப்புகளில் இலக்கிய உரையாடல்களை நிகழ்த்த உள்ளார்கள். இவற்றில் இலக்கிய வரலாறுகள், கதைகள், கவிதைகள், தமிழ் பண்பாடு, நிகழ்த்து கலைகள் போன்ற அனைத்தும் இடம் பெற உள்ளது.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த இலக்கிய திருவிழாவில், 2,000 பங்கேற்பாளர்கள் கலந்து கொள்ளும் வகையில் தனித்தனி அரங்குகள் மற்றும் விழாவினை கண்டு மகிழ அனைத்து வகை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த சிறுவாணி இலக்கிய திருவிழாவில் மாணவர்கள், தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், இலக்கிய அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "தமிழ் இனி மெல்ல சாகும்" - மருத்துவர் ராமதாஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.