ETV Bharat / state

’கரோனா சம்ஹார தேவி சிலை தான் வச்சிருக்கணும்’ - அதிருப்தி தெரிக்கும் பிரபல சித்தர்!

கோயம்புத்தூரில் ’கரோனா தேவி சிலை’ வைத்திருப்பது தவறு, ‘கரோனா சம்ஹார தேவி’ என்று தான் சிலை வைத்திருக்க வேண்டும்” என சித்தர் சிவசண்முக சுந்தர பாபுஜி தெரிவித்துள்ளார்.

சித்தர் சிவசண்முக சுந்தர பாபுஜி
சித்தர் சிவசண்முக சுந்தர பாபுஜி
author img

By

Published : Jun 1, 2021, 6:45 PM IST

Updated : Jun 1, 2021, 7:03 PM IST

கோயம்புத்தூர்: மலுமிச்சம்பட்டி பகுதியில் நாகசக்தி அம்மன் பீடம் உள்ளது. இங்கு சித்தர் சிவசண்முக சுந்தர பாபுஜி, கடந்த 15 ஆண்டுகளாக டெங்கு, சிக்கன் குனியா போன்ற நோய்கள் பரவி வரும் சமயங்களில் எழுந்தருளி மக்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம், பப்பாளி இலைச்சாறு போன்றவற்றை வழங்கி வருகிறார்.

தற்போது நாடு முழுவது கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. இதனால் அவர் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், மூலிகை கசாயம் போன்றவற்றை இலவசமாக வழங்கி வருகிறார்.

சித்தர் சிவசண்முக சுந்தர பாபுஜி

அந்த வகையில், நேற்று (மே.31) சூலூர்பட்டணம் பகுதியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், மூலிகை கசாயத்தை பொது மக்களுக்கு வழங்கினார். பின் இதுகுறித்து அவர் கூறுகையில், ”தமிழ்நாடு அரசு சித்த வைத்தியத்திற்கு முழு அனுமதி அளித்தால் கரோனா தொற்றை முழுமையாக அழிக்க முடியும். ஆயுர்வேத மருத்துவ முறை மூலமும் இந்தத் தொற்றை கட்டுப்படுத்த முடியும்.

கோவையில் ’கரோனா தேவி சிலை’ வைத்திருப்பது தவறு, ‘கரோனா சம்ஹார தேவி’ என்று தான் சிலை வைத்திருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ’தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு சார்பில் 40 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளன’ - எல். முருகன்

Last Updated : Jun 1, 2021, 7:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.