ETV Bharat / state

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட யானை: உரிய சிகிச்சை இல்லாததால் உயிரிழந்த பரிதாபம்

கோவை: துடியலூர் அருகே வீரபாண்டி வால்குட்டை மலையடிவாரத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட 18 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று மூன்று நாட்கள் மருத்துவ சிகிச்சை இல்லாததால் பரிதாபமாக உயிரிழந்தது.

elephant
author img

By

Published : Jul 26, 2019, 2:52 PM IST

கோவை மாங்கரை வனப்பகுதியில் யானைகள் உள்ள யானைகள் தண்ணீர், உணவு தேடி அருகில் உள்ள சின்னதடாகம், பெரியதடாகம், வீரபாண்டி ஆகிய பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகள்,விவசாய நிலங்களுக்கு வருவது வழக்கம்.

இந்நிலையில் வீரபாண்டி வால்குட்டை மலையடிவாரத்தில் செங்கல் சூளைக்கு மண் எடுக்கும் இடத்தில் 18 வயது மதிக்கதக்க பெண் யானை ஒரே இடத்தில் நகராமல் சோர்வுடன் காணப்பட்டது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கோவை மண்டலத்தில் வனத்துறை மருத்துவர்கள் யாரும் இல்லாததால் யானைக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வனத் துறையினரால் முடியவில்லை. இரண்டு நாட்களாகியும் சிகிச்சை அளிக்காததால் யானை திடீரென மயங்கி விழுந்தது. இதனையடுத்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்துறை மருத்துவருக்கு தகவல் அளிக்கப்பட்டு, அங்கு வந்த மருத்துவர் யானையை பரிசோதனை செய்தார். அதில் யானை உயிரிழந்தது தெரியவந்தது.

தொடர்ந்து யானையின் உடல் இன்று காலை உடற்கூறாய்வு செய்யப்பட்டது. இது குறித்து விலங்கு நல ஆர்வலர்கள் கூறுகையில், தமிழ்நாட்டில் முக்கிய பகுதியாக உள்ள கோவை மண்டலத்தில் வனத் துறை மருத்துவர்கள் நியமனம் செய்யப்படவில்லை எனவும், இதே போன்று நீலகிரி மாவட்டத்தில் வனத் துறை மருத்துவர்கள் இல்லாததால் பல்வேறு வனவிலங்குகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதாகவும் வேதனை தெரிவித்தனர். எனவே உடனடியாக அரசு காலியாக உள்ள வனத் துறை மருத்துவ பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். மேலும், ஒரே இடத்தில் 3 நாட்கள் நகர முடியாமல் யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடல் நலக்குறைவால் உயிரிழந்த யானை

Intro:கோவை துடியலூர்
அருகே வீரபாண்டி வால்குட்டை மலையடிவாரத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கபட்ட 18 வயது மதிக்கத்தக்க பெண் யானை மருத்துவ சிகிச்சை இல்லாததால் உயிரிழப்பு..Body:

கோவை மாங்கரை வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன.இந்த யானைகள் தண்ணீர் உணவு தேடி அருகில் உள்ள சின்னதடாகம்,பெரியதடாகம்,வீரபாண்டி ஆகிய பகுதியில் உள்ள செங்கல் சூளைகள்,விவசாய நிலங்களுக்கு வருவது வழக்கம், இந்நிலையில் வீரபாண்டி வால்குட்டை மலையடிவாரத்தில் செங்கல் சூளைக்கு மண் எடுக்கும் இடத்தில் 18 வயது மதிக்கதக்க பெண் யானை கடந்த 3
நாட்களாக ஓரே இடத்தில் நகராமல் சோர்வுடன் நின்று காணப்பட்டது. இதை கண்ட அப்பகுதி மக்கள் யானை நிற்பது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை ஊழியர்கள் பெண்யானையை கண்காணித்து வந்தனர். பெண் யானை உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அதற்கு சிகிச்சை அளிக்கவும் வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் கோவை மண்டலத்தில் வனத்துறை மருத்துவர்கள் யாரும் இல்லாததால் யானைக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முடியவில்லை இரண்டு நாட்கள் சிகிச்சை அளிக்காததால் யானை திடீரென மயங்கி விழுந்து மயங்கிவிழுந்து இதனையடுத்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்துறை மருத்துவர் அசோகனுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அங்கு வந்த வனத்துறை மருத்துவர் அசோகன் யானையை பரிசோதனை செய்தார்.அதில் யானை உயிரிழந்தது தெரிய வந்தது. தொடர்ந்து யானையின் உடல் இன்று காலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது பரிசோதனையின் முடிவில் யானையில் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் இதுகுறித்து விலங்கு நல ஆர்வலர்கள் கூறுகையில் தமிழகத்தில் முக்கிய பகுதியாக உள்ள கோவை மண்டலத்தில் வனத்துறை மருத்துவர்கள் நியமனம் செய்யப்படவில்லை எனவும் மருத்துவர்கள் நியமனம் செய்வதில் அதிகாரிகளிடையே ஒற்றுமை இல்லை எனவும் இதே போன்று நீலகிரி மாவட்டத்தில் வனத்துறை மருத்துவர்கள் இல்லாததால் பல்வேறு வனவிலங்குகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதாகவும் வேதனை தெரிவித்தனர் எனவே உடனடியாக தமிழக அரசு காலியாக உள்ள வனத்துறை மருத்துவ பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என கோரிக்கை வைத்தனர்..
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.